தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பெற்ற தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்பெற்றுள்ள 276 சிவஸ்தலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் (பாண்டிச்சேரி உட்பட) 266 சிவஸ்தலங்கள் உள்ளன. இந்த 266 கோவில்களில், 191 சிவஸ்தலங்கள் முன் காலத்தில் சோழ நாடு என்று குறிப்பிடப்படும் பகுதியான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் (Districts) அமைந்துள்ளன. இவை காவிரியின் வடகரையில் 63, காவிரியின் தென்கரையில் 128 ஆக 191 சிவஸ்தலங்கள். மற்ற 75 சிவஸ்தலங்களில் பாண்டிய நாட்டில் 14, கொங்கு நாட்டில் 7, தொண்டை நாட்டில் 31, நடு நாட்டில் 23 ஆக அமைந்துள்ளன.
பூகோள அமைப்புப் படி தல இருப்பிட விபரங்கள் | எண் |
---|---|
சோழநாடு (காவிரி வடகரை ஸ்தலம்) | 63 |
சோழநாடு (காவிரி தென்கரை ஸ்தலம்) | 128 |
பாண்டிய நாடு | 14 |
நடு நாடு | 23 |
தொண்டை நாடு | 31 |
கொங்கு நாடு | 7 |
தமிழ்நாட்டில் உள்ள 266 சிவஸ்தலங்கள் போக மீதியுள்ள 10 சிவஸ்தலங்கள் இந்தியாவில் மற்ற இடங்களிலும், இலங்கையிலும் அமைந்துள்ளன.
கேரள மாநிலம் ( மலைநாடு ) - 1 ஆந்திரா மாநிலம் - ( தொண்டை நாட்டின் ஒரு பகுதி ) - 1 கர்நாடகா மாநிலம் ( துளுவநாடு ) - 1 இலங்கை ( ஈழநாடு ) - 2 மற்றும் வட இந்தியா ( வடநாடு ) - 5
இந்த புத்தகத்தை சென்னையைச் சேர்ந்த திரு சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். தலங்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பு, தலங்களின் முகவரி, செல்லும் வழி, மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை ரூபாய் 120/- மட்டுமே.
புத்தகம் கிடைக்குமிடம்:
கே. சாய்குமார், 16/28, 2வது பிரதான சாலை, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. தொலைபேசி எண்கள்: 24757212, 9382872358.
திருப்புகழ் முருகன் தலங்கள் பற்றியும், 108 திவ்யதேசத் தலங்கள் மற்றும் அபிமானத் தலங்கள், தேவார வைப்புத் தலங்கள் பற்றியும் இவர் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.