உமா மஹேஸ்வரர் திருக்கோவில், திருநல்லம் (கோனேரி ராஜபுரம்)
சிவஸ்தலம் பெயர்: திருநல்லம் (தற்போது கோனேரி ராஜபுரம் என்ற பெயரில் அறியப்படுகிறது)
இறைவன் பெயர்: உமா மஹேஸ்வரர், மாமனி ஈஸ்வரர்
இறைவி பெயர்: மங்கள நாயகி, அங்கவள நாயகி, தேகசௌந்தரி
பதிகம்: திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1
உமா மஹேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
கும்பகோணம் - காரைக்கால் பாதையில் எஸ்.புதூர் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து தெற்கே வடமட்டம் செல்லும் சாலையில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டுரோடில் இறங்கி 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். அருகில் உள்ள பெரிய ஊர் கும்பகோணம். கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு உமா மஹேஸ்வரர் திருக்கோயில்
கோனேரிராஜபுரம்
கோனேரிராஜபுரம் அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612201
ஆலய நேரம்
காலை: 6:00 - 12:00
மாலை: 4:00 - 8:30
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | திருநாகேஸ்வரம் - - 16 கிமி | |
| 2 | திருவிடைமருதூர் - 17 கிமி | |
| 3 | ஆடுதுறை - 12.4 கிமி | |
| 4 | திருநீலக்குடி - 9.4 கிமி | |
| 5 | வைகல் மாடக்கோவில் - 6 கிமி | |
| 6 | திருக்கோழம்பம் - 5.5 கிமி | |
| 7 | திருவாவடுதுறை - 13.8 கிமி | |
| 8 | திருஅன்னியூர் - 3.5 கிமி | |
| 9 | திருக்கருவிலி கொட்டிட்டை - 5 கிமி |
ஆலய காணொலி
தல வரலாறு
செம்பியன் மாதேவியின் பங்களிப்பு
முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவில் ஆக்கிய பெருமை கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார்.
புராண வரலாறு
பூமாதேவி இத்தலத்து இறைவனை வழிபட்டிருக்கிறாள். திருமால், பிரம்மா, திருமகள், அகத்தியர் போன்ற முனிவர்கள் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.
புரூரவ மன்னன் வரலாறு
புரூரவ மன்னனின் குட்டநோயைத் தீர்த்த பெருமான் இங்குள்ள வைத்தியநாதர் ஆவார். இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு எனப்படுகிறது.
கோவில் அமைப்பு
கோபுரம் மற்றும் நுழைவாயில்கள்
கோவிலின் வெளியே சக்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது. கோவில் முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் எதிரே நீண்ட முன்மண்டபமும், மண்டபத்தின் உள்ளே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியெம் பெருமான் உள்ளனர்.
மண்டப சிறப்புகள்
மண்டபத்தின் மேற்பாகத்தின் உட்புற முழுவதும் அறுபத்துமூவர், சிவமூர்த்தம், பன்னிரண்டு ராசிகள், மகரிஷிகள் முதலிய உருவங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன.
மூலவர் சந்நிதி
மூலவர் உமாமகேசுவரர் சந்நிதி மேற்குப் பார்த்தும், அம்பாள் அங்கவளநாயகியின் சந்நிதி கிழக்குப் பார்த்தும் அமைந்துள்ளன. சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் உமா மஹேஸ்வரர் லிங்க உருவில் காட்சி தருகிறார்.
கோஷ்ட மூர்த்தங்கள்
மூலவர் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், ஜ்வரஹரர், லிங்கோத்பவர், கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் பின்புறம் கிழக்கு நோக்கி காணப்படும் லிங்கோத்பவர், அவரின் இரு பக்கமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருப்பது பார்த்து ரசிக்கத் தக்கது.
பிற சந்நிதிகள்
- வெளிப் பிரகாரத்தில் சண்முகர் சந்நிதி
- வைத்தியநாதர் சந்நிதி
- யாகசாலை மண்டபம்
- மகாகணபதி சந்நிதி
- பிரம்மலிங்கம்
- நடராசசபை
- நால்வர், விநாயகர்கள்
- அகத்திய லிங்கம்
- நவக்கிரகங்கள்
- சனிபகவான், பைரவர், இராகு துர்க்கை, அக்னி
கோவிலின் சிறப்பு அம்சங்கள்
பிரசித்தி பெற்ற திருநல்லம் நடராஜர்
இத்தலத்தில் நடராஜர் திரு உருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் சுயம்புவாக இத்தலத்தில் காட்சி தருகிறார். இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. நடராஜர் உடம்பில் மருவு, ரேகை, தழும்பு போன்றவைகளைக் காண்பது ஒரு அதிசயம்.
கல்யாணசுந்தரர்
இக்கோவிலில் உள்ள கல்யாணசுந்தரர் கல்யாண கோலத்துடனும், ஸ்ரீமகாவிஷ்ணு பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கும் காட்சியுடனும் எருந்தருளியுள்ளார்.
பலன்கள்
ஜாதகத்தில் திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரரையும், நடராஜரையும் வழிபட்டால் அந்த தோஷங்கள் நீங்கும். இங்குள்ள வைத்தீஸ்வரசுவாமியை வழிபடும் பக்தர்களுக்கு பலவகையான நோய்களிலில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
பதிகம்
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்துப் பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்துப் பதிகம்
மேலும் புகைப்படங்கள்