A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்போர் கிபி 6'ஆம் முதல் 8'ஆம் நூற்றாண்டுக்கிடையில் வாழ்ந்த சைவ அடியார்கள் ஆவார். இவர்கள் இயற்றிய பக்திப் பாடல்கள் 'தேவாரம்' என அழைக்கப்படும், இது திருமுறை எனும் சைவ பரம்பரையின் முக்கியமான நூல்தொகுப்பின் ஓர் அடிப்படை பகுதியாகும். தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் வாழ்ந்திருந்த காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட தேவார பதிகங்களில் இந்தக் கோவில்களைப் பற்றியும், கோவில்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவில்கள் தனிச்சிறப்பு பெற்றதில் வியப்பில்லை.

திருமுறை

சைவத் திருமுறைகள் 12 ஆக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் 7, தேவார மூவர் பாடிய பதிகங்களைப் பற்றிய விபரங்களைக் கொண்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களைக் கொண்டுள்ளன. 4,5,6 திருமுறைகளில் திருநாவுக்கரசர் பாடிய பதிகங்களும், 7-ம் திருமுறையில் சுந்தரர் பாடிய பதிகங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியங்களில் தேவாரப் பாடல்கள் என்று குறிப்பிடப்படும் இந்த பதிகங்கள் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன. தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தோன்றி தேவாரம் பாடிய பிறகு, தேவாரம் பெற்ற ஸ்தலங்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது.

தேவார பாடல்களின் பெருமை

அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய இந்த மூவரும் அக்காலத்தில் இருந்த இந்தக் கோவில்களுக்குச் சென்று அங்கு குடி கொண்டுள்ள இறைவனைத் தரிசித்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பல இடங்களில் பதிகங்கள் பாடி அற்புதங்களும் நிகழ்த்தியுள்ளனர். உதாரணமாக திருமருகல் என்கின்ற சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்த ஒரு வணிகனின் உயிரை மீட்டுத் தரும்படி அவன் மனைவி கதறி அழுது கேட்டுக்கொண்டதின் பேரில் அவள் பால் இரக்கப்பட்டு "சடையாய் எனுமால்" எனத் தொடங்கும் பதிகம் பாடி திருஞானசம்பந்தர் இறைவனிடம் உயிர்ப் பிச்சை கேட்டார். இறந்த வணிகனும் திருமருகல் இறைவன் மாணிக்கவண்ணர் பேரருளால் உயிர் பெற்று எழுந்தான். அதே போன்று திங்களூர் சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்ட அப்பூதியடிகள் மூத்த மகனை "ஒன்று கொலாம்" என்று ஆரம்பிக்கும் பதிகம் பாடி இறந்தவனை உயிர்ப்பித்து எழுப்பிய அற்புதம் திருநாவுக்கரசரால் நிகழ்ந்தது. ஒவ்வொரு சிவஸ்தலமும் ஒவ்வொரு பெருமை பெற்றது.

தேவார மூவரும் அவர்கள் காலத்தில் உள்ள போக்குவரத்து சிரமங்களையும் பாராமல் இந்த கோவில்களுக்குச் சென்று அங்குள்ள சிவபெருமானைப் பாடி புகழ்ந்துள்ளனர். ஒரு சில சிவஸ்தலங்களுக்கு இவர்கள் நேரில் போகாமல் இருந்த போது, இறைவனே இவர்கள் கனவிலோ அல்லது அசரீரியாகவோ கூப்பிட்டு அவர்களை வரச்செய்து இறைவன் தன் மேல் பதிகங்கள் பாட வைத்திருக்கிறார்.

திருநாவுக்கரசர்

"அப்பர்" என அழைக்கப்படும் இவர் முதலில் சமண மதத்தைச் சார்ந்து பின் சைவ சமயத்தவரானார். இவரே தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.

  • பிறந்த ஊர் - திருவாமூர்
  • பதிகங்கள் - 313
  • 81 ஆண்டுகள்
திருஞானசம்பந்தர்

சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். ஞானப்பால் அருந்தியவர். இவர் 4,000க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார் என்று நம்பப்படுகிறது.

  • பிறந்த ஊர் - சீர்காழி
  • பதிகங்கள் - 384
  • முக்தி - 16 வயதில்
சுந்தரர்

இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்ததாகக் கூறப்பட்டதால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

  • பிறந்த ஊர் - திருநாவலூர்
  • பதிகங்கள் - 100
  • முக்தி - 18 வயதில்
site logo
தென்னாடுய சிவனே போற்றி

புதியதாக வடிவமைக்கப்பட இந்த இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையதளம் www.shivatemples.com தனது 20 ஆண்டினை நிறைவு செய்துள்ளது. இதுநாள் வரை இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மூன்றாவது ஆண்டு துவக்கத்தில் இந்த இணையதளத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது. தற்போது தமிழ், ஆங்கிலம் - இரண்டு பதிப்புகளையும் புதுப்பிக்கப்படுகின்றது. தமிழ் பதிப்பை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கோருகிறோம்.

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பற்றிய ஒரு வழிகாட்டி (Fourth Edition - 248 pages)

இந்த புத்தகத்தை சென்னையைச் சேர்ந்த திரு சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். தலங்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பு, தலங்களின் முகவரி, செல்லும் வழி, மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை ரூபாய் 120/- மட்டுமே.

புத்தகம் கிடைக்குமிடம்:
கே. சாய்குமார், 16/28, 2வது பிரதான சாலை, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. தொலைபேசி எண்கள்: 24757212, 9382872358.

திருப்புகழ் முருகன் தலங்கள் பற்றியும், 108 திவ்யதேசத் தலங்கள் மற்றும் அபிமானத் தலங்கள், தேவார வைப்புத் தலங்கள் பற்றியும் இவர் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

Stay Updated!

Join our official WhatsApp Channel for daily temple updates.

Join Channel