கொங்கு நாடு - கோவில்கள் பட்டியல் | ||
---|---|---|
# | சிவஸ்தலம் இருப்பிடம் | இறைவன் பெயர் |
1 | திருநணா (பவானி) | சங்கமேஸ்வரர் |
2 | திருச்செங்கோடு | அர்த்தநாரீஸ்வரர் |
3 | கருவூர்-கரூர் | பசுபதிநாதர் |
4 | திருமுருகப்பூண்டி | திருமுருகநாதசுவாமி |
5 | கொடுமுடி | கொடுமுடிநாதர் |
6 | திருப்புக்கொளியூர் (அவிநாசி) | அவிநாசியப்பர் |
7 | வெஞ்சமாக்கூடல் | விகிர்தநாதேஸ்வரர் |
கொங்கு நாடு மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேற்கூறிய 7 சிவஸ்தலங்களும் அமைந்துள்ளன.
மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம்
திருப்பூர் மாவட்டம் | திருமுருகபூண்டி, அவிநாசி |
ஈரோடு மாவட்டம் | திருநணா ( பவானி ), கொடுமுடி |
நாமக்கல் மாவட்டம் | திருச்செங்கோடு |
கரூர் மாவட்டம் | கரூர், வெஞ்சமாக்கூடல் |
பஞ்சபூதத் தலங்கள்
பஞ்சபூதத் தலங்கள். என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். அவை :
- 1. திருவண்ணாமலை - நெருப்பு
- 2. காஞ்சிபுரம் - நிலம்
- 3. திருவானைக்காவல் - நீர்
- 4. திருக்காளத்தி - காற்று
- 5. சிதம்பரம் - ஆகாயம்
பஞ்ச சபை ஸ்தலங்கள்
சிவபெருமான் நடன கோலத்தில் நடராஜராக எழுந்தருளியுள்ள ஸ்தலங்கள் பஞ்ச சபை ஸ்தலங்கள் ஆகும். அவை :-.
- 1. சிதம்பரம் - பொற்சபை
- 2. மதுரை - வெள்ளிசபை
- 3. திருவாலங்காடு - இரத்தினசபை
- 4. திருநெல்வேலி - தாமிரசபை
- 5. குற்றாலம் - சித்திரசபை
சிவ பூஜை
பூஜைகளில் சிறந்தது சிவ பூஜை. சிவ பூஜைக்கான பலன்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.சிவ வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் மந்திரங்கள், பூக்கள், சிவ அபிஷேகத்திற்கு பயன்படுத்தக் கூடிய பொருட்கள், சிவ விரதம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் இருப்பதை போல, சிவன் கோவிலுக்கு சென்று வழிபடும் நேரத்திற்கும், பூஜைக்கும் சிறப்பான பலன்கள் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கான சிறப்பான தலங்கள் கீழே பதிவிடப்பட்டுள்ளது.
- 1. திருக்குற்றாலம் - திருவனந்தல் பூஜை - காலை 6 மணி
- 2. ராமேஸ்வரம் - காலை சந்தி பூஜை - காலை 10 மணி
- 3. திருவானைக்காவல் - உச்சிகால பூஜை - பகல் 12 மணி
- 4. திருவாரூர் - சாயரட்சை பூஜை - மாலை 6 மணி
- 5. மதுரை - பள்ளியறை பூஜை - இரவு 10 மணி
- 6. சிதம்பரம் - அர்த்தஜாம பூஜை - இரவு 10.30 மணி )