வங்கக் கடலோரம் அமைந்துள்ள தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை தமிழ்நாட்டின் நுழைவாயில் என்று கூறினால் அது மிகையல்ல. அனேக பன்னாட்டு விமான சேவைகள் தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னைக்கு போக்குவரத்து வசதியை அளிக்கின்றன. மேலும் இந்தியாவில் உள்ள விமான சேவைகள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு விமானங்களை இயக்குகின்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தமிழ்நாட்டை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இனைக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களுக்கு தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற முக்கிய நகரங்களுக்குச் செல்ல ரயில் போக்குவரத்து வசதியை அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பல முக்கிய சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில்களைப் போய் பார்ப்பதற்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மிகவும் வசதியானது.
தமிழ்நாட்டில் சாலை வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளமையால் எந்த ஒரு தேவாரப் பாடல் பெற்ற சிவ ஸ்தலத்தையும் எளிதாகப் போய் தரிசிக்க முடியும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வசதியாக பேருந்துகள் நாள் முழுதும் இயக்கப்படுகின்றன. அநேக சிவ ஸ்தலங்கள் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் அமைந்து உள்ளன. ஓரு முக்கிய நகரை தங்கும் இடமாக வைத்துக்கொண்டு அந்நகரைச் சுற்றிலும் உள்ள பல சிவ ஸ்தலங்களை தரிசிக்கலாம்.
புதியதாக வடிவமைக்கப்பட இந்த இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையதளம் www.shivatemples.com தனது 16 ஆண்டினை நிறைவு செய்துள்ளது. இதுநாள் வரை இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மூன்றாவது ஆண்டு துவக்கத்தில் இந்த இணையதளத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது. ஆங்கிலப் பதிப்பை விட தமிழ் பதிப்பில் அதிக செய்திகள், அதிக விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் பதிப்பை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கோருகிறோம்.