| சிவஸ்தலம் இருப்பிடம் | இறைவன் பெயர் | |
|---|---|---|
| 1 | கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்) | ஏகாம்பரேஸ்வரர் |
| 2 | திருக்கச்சி மேற்றளி | திருமேற்றளிநாதர் |
| 3 | திருஓணகாந்தான்தளி | ஓணகாந்தேஸ்வரர் |
| 4 | கச்சி அநேகதங்காபதம் | அநேகதங்கா பதேஸ்வரர் |
| 5 | கச்சிநெறிக் காரைக்காடு | காரை திருநாதேஸ்வரர் |
| 6 | திருகுரங்கணில் முட்டம் | வாலீஸ்வரர் |
| 7 | திருமாகறல் | அடைக்கலம்காத்த நாதர் |
| 8 | திருவோத்தூர் | வேதபுரீஸ்வரர் |
| 9 | திருப்பனங்காட்டூர் | பனங்காட்டீஸ்வரர் |
| 10 | திருவல்லம் | வில்வநாதேஸ்வரர் |
| 11 | திருமாற்பேறு | மணிகண்டேஸ்வரர் |
| 12 | திருஊறல் (தக்கோலம்) | ஜலநாதேஸ்வரர் |
| 13 | இலம்பையங்கோட்டூர் | சந்திரசேகரர் |
| 14 | திருவிற்கோலம் | திரிபுரநாதர் |
| 15 | திருவாலங்காடு | வடாரண்யேஸ்வரர் |
| 16 | திருப்பாசூர் | வாசீஸ்வரர் |
| 17 | திருவெண்பாக்கம் | ஊண்றீஸ்வரர் |
| 18 | திருக்கள்ளில் | சிவானந்தேஸ்வரர் |
| 19 | திருவொற்றியூர் (சென்னை) | ஆதிபுரீசர், படம்பக்கநாதர் |
| 20 | திருவலிதாயம் | வலிதாய நாதர் |
| 21 | திருமுல்லைவாயில் | மாசிலாமனி ஈஸ்வரர் |
| 22 | திருவேற்காடு | வேதபுரீஸ்வரர் |
| 23 | திருமயிலை (சென்னை) | கபாலீஸ்வரர் |
| 24 | திருவான்மியூர் (சென்னை) | மருந்தீஸ்வரர் |
| 25 | திருக்கச்சூர் ஆலக்கோவில் | கச்சபேஸ்வரர் |
| 26 | திருஇடைச்சுரம் | ஞானபுரீஸ்வரர் |
| 27 | திருக்கழுகுன்றம் | வேதகிரீஸ்வரர் |
| 28 | அச்சிறுபாக்கம் | ஆட்சீஸ்வரர் |
| 29 | திருவக்கரை | சந்திரமவுலீஸ்வரர் |
| 30 | திருஅரசிலி | அரசிலிநாதர் |
| 31 | இரும்பை மாகாளம் | மாகாளேஸ்வரர் |
தமிழ்நாட்டின் இன்றைய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் நாயன்மார்களால் தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் தொண்டை நாடு என்று குறிப்பிடப்பட்டது.
நடு நாட்டிலுள்ள சில சிவ ஸ்தலங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளன. அவைகளை நடு நாட்டிலுள்ள சிவ ஸ்தலங்கள் பட்டியலில் பார்க்க. அதே போல், திருவண்ணாமலை, நடு நாட்டு பட்டியலில் பார்க்க.
பயண குறிப்புகள்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேவார பாடல் பெற்ற தலங்களை தரிசனம் செய்ய காலை 8 மணி அளவில் தொடங்கினால், முதலில் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவெண்பாக்கம் சென்று இறைவன் ஊன்றீஸ்வரை தரிசனம் செய்து பின் மீண்டும் கடம்பத்தூர் செல்லும் சாலை வழியை அடைந்து, திருப்பாச்சூர் வாசீஸ்வரரை தரிசனம் செய்யலாம். அதன் பின் திருப்பாச்சூரில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமாக கடம்பத்தூர் மற்றும் பேரம்பாக்கம் வழியாக கூவம் கிராமத்திலிருந்து திருவிற்கோலம் அடையலாம். பின், அங்கிருந்து திரு இலம்பையங் கோட்டூர் சென்று தரிசனம் முடித்து, பேரம்பாக்கம் வழியாக கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து திருவாலங்காடு அடையலாம். நேரம் சரியாக இருப்பின், இந்த 5 தலங்களையும் மாலை 4 மணிக்குள் தரிசனம் செய்து முடிக்கலாம். மீதி நேரம் இருந்தால் அங்கிருந்து தக்கோலம் மற்றும் திருமால்பூர் சென்று ஒரே நாளில் 7 கோவில்களையும் தரிசனம் செய்ய முடியும்.
மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.
காஞ்சிபுரம் மாவட்டம்
1. கச்சி ஏகம்பம்
2. திருக்கச்சி மேற்றளி
3. திருஓணகாந்தான்தளி
4. கச்சி அநேகதங்காபதம்
5. கச்சிநெறிக் காரைக்காடு
6. திருமாகறல்
7. இலம்பையங்கோட்டூர்
8. திருக்கச்சூர் ஆலக்கோவில்
9. திருஇடைச்சுரம்
10. திருக்கழுகுன்றம்
11. அச்சிறுபாக்கம்