Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


நடு நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

சிவஸ்தலம் இருப்பிடம்இறைவன் பெயர்
1திருநெல்வாயில் அரத்துறைதீர்த்தபுரீஸ்வரர்
2தூங்கானை மாடம்-பெண்ணாகடம்சுடர்கொழுந்தீசர்
3திருக்கூடலையாற்றுர்நர்த்தன வல்லபேஸ்வரர்
4திருஎருக்கத்தம்புலியூர்திருநீலகண்டேஸ்வரர்
5திருத்திணை நகர்சிவக்கொழுந்தீசர்
6திருச்சோபுரம்சோபுரநாதர்
7திருவதிகைஅதிகை வீரட்டநாதர்
8திருநாவலூர்திருநாவலேஸ்வரர்
9திருமுதுகுன்றம்பழமலைநாதர்
10திருநெல்வெண்ணைசொர்ணகடேஸ்வரர்
11திருக்கோவிலூர்வீரட்டேஸ்வரர்
12திருஅறையணி
நல்லூர்
அதுல்யநாதேஸ்வரர்
13திருவிடையாறுஇடையாற்று நாதர்
14திருவெண்ணை
நல்லூர்
கிருபாபுரீஸ்வரர்
15திருத்துறையூர்சிஷ்டகுருநாதர்
16வடுகூர்பஞ்சநாதீஸ்வரர்
17திருமாணிகுழிவாமனபுரீஸ்வரர்
18திருப்பாதிரிப்புலியூர்பாடலீஸ்வரர்
19திருமுண்டீச்சரம்சிவலோக நாதர்
20புறவர் பனங்காட்டூர்பனங்காட்டீஸ்வரர்
21திரு ஆமாத்தூர்அழகிய நாதர்
22திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர்
23கிளியனூர்அகத்தீஸ்வரர்

இத்தலங்கள் யாவும் தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் அமைந்துள்ளன.

மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.


மாவட்ட வாரியாக கோவில்கள் அமைந்துள்ள விபரம்
விழுப்புரம் மாவட்டம்திருநாவலூர், திருநெல்வெண்ணை, திருக்கோவிலூர், திருஅறையணிநல்லூர், திருவிடையாறு, திருவெண்ணைநல்லுர், திருத்துறையூர், திருமுண்டீச்சரம், புறவர் பனங்காட்டூர், திரு ஆமாத்தூர், கிளியனூர்
கடலூர்
மாவட்டம்
திருநெல்வாயில் அரத்துறை, தூங்கானை மாடம் (பெண்ணாகடம்), திருக்கூடலையாற்றுர், திருஎருக்கத்தம்புலியூர், திருத்திணை நகர், திருச்சோபுரம், திருவதிகை, திருமாணிகுழி, திருப்பாதிரிப்புலியூர், திருமுதுகுன்றம்
திருவண்ணாமலை மாவட்டம்திருவண்ணாமலை
புதுச்சேரி மாநிலம்வடுகூர்

தொண்டை நாட்டிலுள்ள சில சிவ ஸ்தலங்கள் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளன. அவைகளை தொண்டை நாட்டிலுள்ள சிவ ஸ்தலங்கள் பட்டியலில் பார்க்க.


காவிரி நதியின் வடகரையிலுள்ள சில சிவ ஸ்தலங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன. அவைகளை காவிரி வடகரைத் தலங்கள் பட்டியலில் பார்க்க.


நடு நாட்டு ஸ்தலங்கள் - விழுப்புரம் மாவட்டம் - வரைபடம். Map courtesy by: Google Maps


நடு நாட்டு ஸ்தலங்கள் - கடலூர் மாவட்டம் - வரைபடம்.
Map courtesy by: Google Maps

தகவல் பகுதி

சப்த விடங்க ஸ்தலங்கள்


புராணத்தின் படி, முசுகுந்தன் என்ற சோழ மன்னன் இந்திரனிடமிருந்து ஒரு வரத்தைப் பெற்று, இந்திரனால் வணங்கப்பட்ட தியாகராஜ சுவாமியின் உருவத்தைப் பெற விரும்பினான். இந்திரன் தான் வழிபடும் சிலையைத் தர விரும்பாமல், மன்னனை வழிநடத்த முயன்று, மேலும் ஆறு உருவங்களை உருவாக்கி, தனக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்குமாறு முசுகுந்தனிடம் கேட்டான். ஆனால் மன்னர் சரியான உருவத்தைத் தேர்ந்தெடுத்ததால், இந்திரன் அசல் மற்றும் 6 தியாகராஜர் சிலையை மன்னரிடம் கொடுத்தார். மூல விக்கிரகம் திருவாரூரிலும், மற்ற ஆறு விக்கிரகங்கள் திருநல்லாறு, நாகப்பட்டினம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு ஆகிய இடங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த 7 கோயில்களும் மொத்தமாக சப்தவிடங்க ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன


முக்கிய திருவிழாக்கள்


திருவிழா என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி இறைவனுக்கு நன்றி செலுத்தி கொண்டாடுவது. இப்பகுதியில் முக்கிய திருவிழாக்கள், ஊர் மற்றும் மாதத்தின் பெயரோடு கொடுக்கப்பட்டுள்ளது.

1. சிதம்பரம் - ஆருத்ரா தரிசனம் மற்றும் தேரோட்டம் ( மார்கழி பவுர்ணமி )
2. உத்தர கோச மங்கை - ஆருத்ரா தரிசனம் ( மார்கழி )
3. திருவாரூர் - ஆழி தேரோட்டம் ( மாசி)
4. சிதம்பரம் - ஆனி திருமஞ்சனம் ( ஆனி)
5. திருவண்ணாமலை - கார்த்திகை தீபம் ( கார்த்திகை )
6. காளஹஸ்தி - மஹா சிவராத்திரி ( மாசி ) பிரம்மோற்சவம்
7. மதுரை - ஆவணி மூல (புட்டு) திருவிழா ( ஆவணி )
8. மதுரை - மார்கழி அஷ்டமி சப்பரம் ( மார்கழி )
9. திருவையாறு - அப்பர் கயிலாய காட்சி ( ஆடி அமாவாசை )
10. திருவஞ்சைக்களம் ( கேரளா) - சுந்தரர் கயிலாய காட்சி ( ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் )
11. திருக்கழுகுகுன்றம் - லட்சதீப திருவிழா ( கன்னி லக்னத்தில் குரு பகவான் பிரவேசிக்கும் நாள் )
12. கும்பகோணம் - மகாமக பெருவிழா ( மாசி )

*மேலே குறிப்பிட்டவற்றில் லட்ச தீப திருவிழா மற்றும் மகாமக பெருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். வருகின்ற 2028 இல் இந்த இரு திருவிழாக்களும் நடைபெறுகின்றது.