A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
சோபுரநாதர் திருக்கோவில், திருசோபுரம்

சிவஸ்தலம் பெயர்: திருசோபுரம்

இறைவன் பெயர்: சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர்

இறைவி பெயர்: சோபுரநாயகி, தியாகவல்லியம்மை

பதிகம்: திருஞானசம்பந்தர் - 1

சோபுரநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

கடலூர் - சிதம்பரம் சாலை வழியில் கடலூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலுள்ள ஆலப்பாக்கம் என்ற கிராமத்தை அடைந்து அங்கிருந்து பிரிந்து ஆலப்பாக்கம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் சென்று ரயில் பாதையைக் கடந்து சுமார் 1.5 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். திருசோபுரம் கிராமத்தில் சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்
திருச்சோபுரம்
தியாகவல்லி அஞ்சல்
கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608801
ஆலய நேரம்

காலை: 8:30 - 11:00
மாலை: 5:30 - 8:00

வரைபடம் – சோபுரநாதர் கோவில், திருசோபுரம்
கோவில் அமைப்பு

மணற்பாங்கான பகுதியில் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. விசாலமான இடப்பரப்பு. ஓரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. இரண்டாவது வாயில் வழியே உள்ளே நுழைந்து உட்பிரகார வலம் வரும் போது சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்பர், திரிபுவன சக்கரவர்த்தி அவர் மனைவி வழிபட்ட லிங்கங்கள், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.

விநாயகரைத் தொடர்ந்து அறுபத்துமூவர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் உள்ளன. கருவறை முன் மண்டபம் கடந்து செல்லும் போது நேரே மூலவர் தரிசனம் தருகிறார். முன் மண்டபத்தின் இடதுபுறம் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. இரு சந்நிதிகளையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கக் கூடிய அமைப்புடன் அமைந்துள்ளன.

சிறப்பு அம்சங்கள்

மூலவர்: இத்தலத்து மூலவர் சிவலிங்கத் திருமேனி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சதுர ஆவுடையார் மீது பாணம் சுற்றளவு சற்று குறைவாக நீட்டுவாக்கில் உள்ள லிங்கத் திருமேனி. சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்த போது ஏற்பட்ட கைத்தடமும் இருக்கிறது.

அம்பாள்: நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

கோஷ்ட மூர்த்தம்: லிங்கோத்பவருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர். மும்மூர்த்திகளின் இந்த தரிசனம் விசேஷமானது.

தலபுராணம்
திருப்பணி வரலாறு

கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும், பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும் சொல்லப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தி முதல் குலோத்துங்கனின் பட்டத்து மனைவியான தியாகவல்லியால் திருப்பணி செய்யப்பட்ட காரணத்தால் இத்தலம் தியாகவல்லி என்று பெயர் பெற்றதாகக் கூறுவர்.

கோயில் மறுகண்டுபிடிப்பு

இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டு விட்டது. பிற் காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தை பற்றி அறிந்து சுவாமியை தரிசனம் செய்ய வந்தார். ஆனால் இங்கு கோயில் இல்லை. ஓரிடத்தில் கோபுர கலசத்தின் நுனி மட்டும் தெரிந்தது. அதன்பின், ஊர்மக்கள் மணலை அகற்றி இக் கோயிலை வெளிக்கொண்டு வந்தனர்.

பதிகம்திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. வெங்கண் ஆனை யீருரிவை
மேலும் புகைப்படங்கள்