Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

பரிகார ஸ்தலங்களின் பட்டியல்


#விவரம்ஸ்தலம்
1புத்திர பாக்கியம்பசுபதிநாதர் திருக்கோவில், கருவூர் (கரூர்)
2இழந்த பொருளை மீண்டும் பெறதிருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகபூண்டி
3சனி, செவ்வாய் தோஷம் நீங்கதீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருநெல்வாயில் அரத்துறை
4குஷ்ட நோய், தோல் வியாதி நிவ்ருத்திசிவக்கொழுந்தீசர் திருக்கோவில், திருத்திணை நகர்
5சூலை நோய், வயிற்று வலி நீங்கஅதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை
6திருமண தடை நீங்கமருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவிடையாறு (டி. எடையார்)
7திருமண தடை நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்கசிஷ்டகுருநாதர் திருக்கோவில், திருத்துறையூர்
8சூரிய தோஷ பரிகார ஸ்தலம்பனங்காட்டீஸ்வரர் திருக்கோவில், புறவார் பனங்காட்டூர்
9பங்காளி சண்டை பிரச்னை தீர்க்கஅழகியநாதர் திருக்கோவில், திருவாமாத்தூர்
10வினைப்பயன்கள் நம்மை பற்றாது இருக்கஆப்புடையார் கோவில், திருஆப்பனூர்
11வியாபாரத்தில் முன்னேற்றம் காணபரங்கிரிநாதர் கோவில், திருப்பரங்குன்றம்
12பித்ருக்கள் வழிபாடு செய்ய, சித்த பிரமை நீக்கும்ஏடகநாதேஸ்வரர் கோவில், திருவேடகம்
13ஏவல், பில்லி, சூனியம் செய்வினை போன்ற தொல்லைகள் போக்கும்திருத்தளிநாதர் கோவில், திருப்புத்தூர்
14பித்ருதோஷ நிவர்த்தி தலம்இராமநாதசுவாமி திருக்கோவில், இராமேஸ்வரம்
15முன்ஜென்ம தீவினைகள் நீங்கஆடானைநாதர் கோவில், திருவாடானை
16முன்னோர்களுக்கு முக்தி அளிக்கும்புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில், திருப்பூவணம்
17பாவங்கள், வினைகள் நீங்கி இன்பமுடன் வாழதிருமேனிநாதர் கோவில், திருச்சுழியல்
18கண் பார்வை கோளாறு நீக்கும்ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்)
19அருளும் பொருளும் பெறஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில், திருஓணகாந்தன்தளி
20நாக தோஷம் மற்றும் சகல தோஷங்களும் விலகவேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவோத்தூர்
21குரு தோஷ பரிகாரத் தலம்தெய்வநாதேஸ்வரர் கோவில், இலம்பையங்கோட்டூர்
22திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும்வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு
23அனைத்து நக்ஷத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய தலம்ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர்
24திருமணத் தடை, குரு தோஷம் போக்கும்வலிதாயநாதர் கோவில், திருவலிதாயம்
25குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்ந்து அமைதியுடன் வாழமாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்
26திருமண பரிஹாரத் தலம்வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு
27பங்குனி மாத பிரம்மோற்ஸவம் சிறப்புபெற்றகபாலீஸ்வரர் கோவில், திருமயிலை, சென்னை
28பசிப்பிணி போக்கி அருளும் தலம்தியாகராஜசுவாமி திருக்கோவில், திருக்கச்சூர் ஆலக்கோவில்
29சகல நோய்களும் நீங்கும்ஞானபுரீஸ்வரர் கோவில், திருஇடைச்சுரம்
30பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம்அரசலீஸ்வரர் கோவில், திருஅரசிலி
31திருமணத் தடை, தீராத கடன் பிரச்னை நீங்கசிவலோக தியாகேசர் கோவில்,ஆச்சாள்புரம்
32நன்மக்கட்பேறு அருளும்சுவேதாரன்யேஸ்வரர் திருக்கோவில், திருவெண்காடு
33செய்த பாவங்கள் தீரவெள்ளடை நாதர் கோவில், திருக்குருகாவூர், வெள்ளடை
34செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம்வைத்தீஸ்வரன் கோவில்
35ஆயுள் பெருக, பூர்வ ஜென்ம பாவம் விலகசிவலோகநாதர் கோவில், திருப்புன்கூர்
36திருமண தடை நீக்கும்மணவாளேஸ்வரர் திருக்கோவில், திருவேள்விக்குடி
37சூரிய தோஷம் நீக்கும் பரிகாரத் தலம்குற்றம்பொறுத்தநாதர் கோவில் திருகருப்பறியலூர்
38சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம்பதஞ்சலிநாதர் திருக்கோவில், திருக்கானாட்டுமுள்ளூர்
39பாவங்கள் தீவினைகளை அகற்றும்சௌந்தரேஸ்வரர் கோவில், திருநாரையூர்
தகவல் பகுதி

சப்த விடங்க தாண்டவங்கள்


சப்த விடங்க தலங்களில் தியாகராஜ பெருமான் ஆடி அசைந்து வீதி உலா வரும் தாண்டவத்தின் விளக்கம் கீழ் கொடுக்கப் பட்டுள்ளது.

1. உன்மத்த தாண்டவம் (நகர விடங்கர்) - பக்தர்களின் அன்பைத் தாங்க முடியாமல் பித்து பிடித்தது போல தாண்டவமாடுவது - திருநள்ளாறு.

2. அசபா தாண்டவம் (வீதி விடங்கர் ) - மேலும் கீழுமாக ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும், அடியவர்கள் மந்திரத்தை மானசீகமாக ஏற்கும் நிலையில் உள்ளம் மகிழ்ந்து ஆடுவது - திருவாரூர்.

3. வீசி தாண்டவம் (சுந்தர விடங்கர்) - கடல் அலையை போலவே முன்னும் பின்னுமாக வருவதும் போவதுமாக தாண்டவமாடுவது - நாகப்பட்டினம்.

4. குக்குட தாண்டவம் (ஆதி விடங்கர்) -கோழியின் அசைவுகளை ஒத்து வெட்டி வெட்டி நடனம் ஆடிக் காட்டிய அற்புத திருத்தலம் - திருக்காறாயில்.

5. ப்ருங்க தாண்டவம் (அவனி விடங்கர்) - தேன் சேகரிக்கும் போது ரீங்காரம் இட்டுக் கொண்டு அங்கும் இங்கும் அலையும் தேனியைப் போல ஆடுவதே ப்ருங்க தாண்டவம் - திருக்குவளை.

6. கமலா தாண்டவம் (நீல விடங்கர்) -தென்றல் காற்றில் அசைந்து ஆடும் தாமரை மலரின் அசைவுகளை போல் தாண்டவமாடுவது - திருவாய்மூர்.

7. அம்சபாத தாண்டவம் (புவன விடங்கர்) - அன்னம் போல சின்ன சின்னதாக அடி எடுத்து வைத்து மெதுவாகவும் மென்மையாகவும் தாண்டவமாடுவது - வேதாரண்யம்.


முக்தி அளிக்கும் சிவ தலங்கள்


1. திருவாரூர் - பிறக்க முக்தி தருவது.
2. சிதம்பரம் - தரிசிக்க முக்தி தருவது.
3. திருவண்ணாமலை - நினைக்க முக்தி தருவது.
4. அவினாசி - கேட்க முக்தி தருவது.
5. திருவாலவாய் ( மதுரை ) – சொல்ல முக்தி தருவது.
6. காஞ்சீபுரம் - வாழ முக்தி தருவது.
7. காசி - இறக்க முக்தி தருவது.