Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

வலைத்தளத்தை பற்றி / தொடர்பு கொள்ள

திரு.நாராயணசாமி

இந்த இணையதளத்தை உருவாக்கிய மறைந்த திரு.நாராயணசாமி, தமிழ்நாட்டிலுள்ள 266 பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கும் சென்று, ஒவ்வொரு கோயிலைப் பற்றிய துல்லியமான தகவல்களைச் சேகரித்து இந்த வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அவரது இந்த முயற்சி, பாடல் பெற்ற சிவஸ்தலங்களை பற்றிய தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், புறக்கணிக்கப்பட்ட சில கோயில்களைப் புதுப்பிக்க நன்கொடை திரட்டவும் உதவியது.

அவரின் "பரிகாரத் தலங்கள்" என்கிற தலைப்பில் கட்டுரைகள் , தினமணியின் இணையத்தளத்தில் வெளியானது. சம்பந்தப்பட்ட அந்த கட்டுரைகளின் இணைப்பு இந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அவை இரண்டு தொகுதிகள் உள்ள புத்தகங்களாக 'பின்னாக்கிள்' பதிப்பகத்தாரால் புத்தகங்களாக வெளியிடப்பட்டன.

ஏறக்குறைய 20 வருடங்களாக இக்கோவில்களுக்கு சென்று, ஒரு சிவதொண்டாக, சேகரித்த தகவல்களை தனது வலைத்தளத்தில் ஆவணப்படுத்துவதில், தனது ஓய்வு காலத்தை கழித்தார்.

திரு. நாராயணசாமி, 21 ஆகஸ்ட் 2023 அன்று காசி யாத்திரையிலிருந்து திரும்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு, அவரது இல்லத்தில் சிவலோகப் பிராப்தியை நிம்மதியாக அடைந்தார்.

அவரது நினைவாக, அவரது மகள் இப்போது இந்த இணையதளத்தை பராமரிக்கிறார்.


தொடர்பு கொள்ள - - கைபேசி: +91 9901026795

உங்களின் மேலான கருத்துக்களை contactus@shivatemples.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

site logo
Ohm Namasivaya

புதியதாக வடிவமைக்கப்பட இந்த இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையதளம் www.shivatemples.com தனது 20 ஆண்டினை நிறைவு செய்துள்ளது. இதுநாள் வரை இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மூன்றாவது ஆண்டு துவக்கத்தில் இந்த இணையதளத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது. தற்போது தமிழ், ஆங்கிலம் - இரண்டு பதிப்புகளையும் புதுப்பிக்கப்படுகின்றது. தமிழ் பதிப்பை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கோருகிறோம்.