Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பேரெயில் (தற்போது ஓகைப்பேரையூர் என்றும் வங்காரப் பேரையூர் என்றும் வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்ஜகதீசுவரர்
இறைவி பெயர்பெண்ணமிர்த நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கமலாபுரத்திற்கு அடுத்துள்ள மூலங்குடி சென்று இத்தலத்தை அடையலாம். திருவாரூரில் இருந்து மாவூர் கூட்டுரோடு - வடபாதி மங்கலம் சாலை வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு ஜகதீசுவரர் திருக்கோயில்
ஓகைப்பேரையூர்
வடபாதிமங்கலம் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610206

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலயத்தின் அர்ச்சகர் பாஸ்கர சிவாச்சாரியார் சற்று தொலைவில் இருந்து வருவதால், அவரை முன்கூட்டியே தொடர்பு கொண்டு ஆலயத்திற்குச் செல்வது நல்லது. அவரது கைபேசி எண்: 9360740260
map showing location of Ogaiperaiyurதிருவாரூரில் இருந்து ஓகைப்பேரையூர் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps

கோவில் அமைப்பு : இக்கோவில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிரகாரத்துடனும் அமைந்துள்ளது.மூலவர் ஜகதீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் எல்லா சிவாலயங்களிலும் இருப்பது போல தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். உள்பிரகாரத்தில் கற்பக விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், அய்யனார், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. இத்தலத்திலுள்ள நடராஜர் மிகவும் அழகானதோர் உருவத்துடன் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் தல மரமாக நாரத்தை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளன. வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

திருநாவுக்கரசு சுவாமிகள் இத்தலத்து இறைவன் மேல் பாடி அருளியுள்ள பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

ஜகதீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
3 நிலை கோபுரம்
கோபுர வாயில் கடந்து தோற்றம்
ஆலயத்தின் உள் தோற்றம்
பிராகாரத்தில் ஜரதேவர், சண்டிகேஸ்வரர், சந்திரன்
பலிபீடம், நந்தி
இறைவி பெண்ணமிர்த நாயகி