Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருமீயச்சூர் இளங்கோவில்
இறைவன் பெயர்சகலபுவனேஸ்வரர்
இறைவி பெயர்மின்னு மேகலையாள்
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது திருமீய்ச்சூர் மேகநாதர் கோவிலின் உள்ளே வடக்குப் பிரகாரத்தில் திருமீய்ச்சூர் இளங்கோவில் தலம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு மேகநாதர் (சகலபுவனேஸ்வரர்) திருக்கோயில்
திருமீயச்சூர்
திருமீயச்சூர் அஞ்சல்
வழி பேரளம்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609405

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயிலின் உள்ளே வடக்குப் பிரகாரத்தில் திருமீயச்சூர் இளங்கோயில் என்றொரு தனிக்கோவில் உள்ளது. இதில் கிழக்கு நோக்கி இறைவன் சகல புவனேச்வரரும், தெற்கு நோக்கி இறைவி மின்னு மேகலையாளும் தனித்தனி கருவறையில் வீற்றிருக்கக் காணலாம். இறைவன், இறைவி சந்நிதிகள் அநேக நேரங்களில் மூடியே காணப்படுகின்றன. அப்பர் பெருமான் தனது பதிகத்தின் 6-வது பாடலில் இத்தல இறைவியை மின்னு மேகலையாள் என்று குறிப்பிடுகிறார். இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தில் வழக்கமாக துர்க்கை காணப்படும் இடத்தில் சதுர்முக சண்டிகேஸ்வரர் காணப்படுகிறார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

சகலபுவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
மேகநாதசுவாமி கோயிலின் உள்ளே வடக்குப் பிரகாரத்தில் உள்ள திருமீயச்சூர் இளங்கோயில்
சகலபுவனேஸ்வரர்
மின்னு மேகலையாள்