Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


பனங்காட்டீஸ்வரர் திருக்கோவில், புறவார் பனங்காட்டூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்புறவார் பனங்காட்டூர் (தற்போது பனையபுரம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்பனங்காட்டீஸ்வரர்
இறைவி பெயர்சத்யாம்பிகை, புரவம்மை, மெய்யாம்பாள்
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது 1. விழுப்புரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டு - விழுப்புரம் ரயில் பாதையில் உள்ள முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் விழுப்புரம். விழுப்புரத்திலிருந்து திருக்கானூர் வழியாக புதுச்சேரி செல்லும் பேருந்தில் சென்றால் கோயிலருகில் இறங்கலாம்.

2. திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் விக்கரவாண்டியைக் கடந்தவுடன் பண்ருட்டி செல்ல சாலை இடதுபுறம் பிரியும். அச்சாலையில் சென்றால் பனயபுரம் கூட்டு ரோடு வரும். இங்கு புதுச்சேரி செல்ல இடதுபுறம் திரும்பினால் ஆலயம் மிக அருகிலுள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு பனங்காட்டீசர் திருக்கோவில்
பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம்
விழுப்புரம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 605603


இத்தலம் சூர்ய தோஷ பரிகார ஸ்தலமாக போற்றப்படுகிறது

மேலும் படிக்க...

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

தல வரலாறு: சிவபெருமானை நிந்தித்துத் தக்ஷன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூர் என்ற் இத்தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.


கோவில் அமைப்பு: 4 நிலைகளையுடைய ஒரு சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் நுழைந்து உள் சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனை மரங்கள் மூன்று உள்ளன. நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்திலுள்ளது. உள் வாயில் கடந்து சென்றால் சுவாமி சந்நிதியை அடையலாம். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர் சிலா ரூபங்கள் உள்ளன. இவற்றில் திருநீலகண்டர் தம் மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு காணத்தக்கது. மேலும் உள சுற்றில் சப்தமாதர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, கஜலஷ்மி, நால்வர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் முதலிய சந்நிதிகள் உள்ளன.

அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி நுழைவாயிலில் துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். அம்பாள் சத்யாம்பிகை நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.



பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இதுவும் ஒன்று. ஏனையவை (1) திருப்பனந்தாள், (2) திருப்பனையூர், (3) திருவோத்தூர், (4) திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு) என்பன.


திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்திலுள்ள 10 பாடல்களையும் பாடுவர்கள் சிவலோகம் சேர்வர் என்று தன் பதிகத்தின் 10வது பாடலில் குறிப்பிடுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலை 45C விரிவாக்கப்பணிக்காக, 1300 ஆண்டு பழைமையான இத்திருக்கோயிலின் முக்கிய பகுதிகள் எடுத்துக்கொள்ளப்பட குறிக்கப்பட்டு, பின்னர் ஊர் மக்கள், வெளியூர் பக்தர்கள், சிவனடியார்கள், பத்திரிக்கைகள் ஆகியோர் எதிர்ப்பை பதிவு செய்ததை அடுத்தும், ஊர் மக்கள் சுப்பிரமணிய சுவாமியை அணுகி உதவி வேண்டியதையடுத்தும் நெடுஞ்சாலைத்துறை மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தது. மக்கள் எதிர்ப்பையடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட நில எடுப்பு அலுவலர் ஆகியோர் மாற்று வழியை பரிந்துரைத்தனர். அதறகுப் பிறகு கோயில் பகுதியை இடிக்காமல் மதில் சுவரை ஒட்டி சாலையிட நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. விண்ண மர்ந்தன மும்ம தில்களை
பனங்காட்டீஸ்வரர் ஆலயம்
புகைப்படங்கள்

ஆலயத்தின் இராஜகோபுரம்
பிரம்மா
சிவசூரியினார்
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி
திருநீலகண்டர், அவர் மனைவி
ஆறுமுகனார்
சத்யாம்பிகை கோவில்