தகவல் பகுதி
பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் தொடர்பான பொதுவான தகவல்களை இப்பகுதியில் காணலாம். அஷ்ட வீரட்ட ஸ்தலங்கள், ஜோதிர் லிங்கங்கள், சக்தி பீடங்கள், சிவபெருமானின் 64 வடிவங்கள் என தொடங்கி, இது போன்ற பல பொதுத் தகவல்கள் இங்கு காலப்போக்கில் தொடர்ந்து சேர்க்கப்படும்.
பஞ்சபூத ஸ்தலங்கள்
பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. திருக்காளத்தி ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவை :
- திருவண்ணாமலை - நெருப்பு
- காஞ்சிபுரம் - நிலம்
- திருவானைக்காவல் - நீர்
- சிதம்பரம் - ஆகாயம்
- திருக்காளத்தி - காற்று
பஞ்ச சபை ஸ்தலங்கள்
சிவபெருமான் நடன கோலத்தில் நடராஜராக எழுந்தருளியுள்ள ஸ்தலங்கள் பஞ்ச சபை ஸ்தலங்கள் ஆகும். அவை :
- சிதம்பரம் - பொற்சபை
- மதுரை - வெள்ளிசபை
- குற்றாலம் - சித்திரசபை
- திருவாலங்காடு - இரத்தினசபை
- திருநெல்வேலி - தாமிரசபை
சிறப்பு நேர பூஜை
பூஜைகளில் சிறந்தது சிவ பூஜை. சிவ பூஜைக்கான பலன்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.சிவ வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் மந்திரங்கள், பூக்கள், சிவ அபிஷேகத்திற்கு பயன்படுத்தக் கூடிய பொருட்கள், சிவ விரதம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் இருப்பதை போல, சிவன் கோவிலுக்கு சென்று வழிபடும் நேரத்திற்கும், பூஜைக்கும் சிறப்பான பலன்கள் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கான சிறப்பான தலங்கள் கீழே பதிவிடப்பட்டுள்ளது.
- மதுரை - பள்ளியறை பூஜை - இரவு 10 மணி
- ராமேஸ்வரம் - காலை சந்தி பூஜை - காலை 10 மணி
- திருக்குற்றாலம் - திருவனந்தல் பூஜை - காலை 6 மணி
- சிதம்பரம் - அர்த்தஜாம பூஜை - இரவு 10.30 மணி )
- திருவானைக்காவல் - உச்சிகால பூஜை - பகல் 12 மணி
- திருவாரூர் - சாயரட்சை பூஜை - மாலை 6 மணி
சப்த விடங்க ஸ்தலங்கள்
சப்த விடங்கத் தலங்கள் என்பது, சிவபெருமான் தியாகராஜர் வடிவில் அருள்பாலிக்கும் ஏழு திருத்தலங்களைக் குறிக்கிறது. இத்தலங்கள் ஒவ்வொன்றும் சிவபெருமானின் தனித்துவமான தெய்வீக நடன அசைவுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன. பக்தி, இறையருள் மற்றும் தெய்வீக நடனம் ஆகியவற்றை இணைக்கும் சுவாரஸ்யமான புராண வரலாற்றுடன் இத்தலங்கள் தொடர்புடையவை.
தேவர்களின் தலைவனான இந்திரன், தியாகராஜர் வடிவில் சிவபெருமானை வழிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சோழ மன்னன் முசுகுந்தன், இந்திரனின் அருளைப் பெற்ற பின்னர், பூலோகத்தில் வழிபடுவதற்காக தியாகராஜரின் திருமேனியைத் தமக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அந்தப் புனிதமான திருமேனியை விட்டுக் கொடுக்க விரும்பாத இந்திரன், அதேபோன்று தோற்றமளிக்கும் மேலும் ஆறு திருமேனிகளை உருவாக்கினார். ஆனால், தனது ஆழ்ந்த பக்தி மற்றும் தெய்வீக ஞானத்தின் மூலம் முசுகுந்த மன்னன் உண்மையான திருமேனியை அடையாளம் கண்டுகொண்டார். அவரது பக்தியில் மகிழ்ந்த இந்திரன், அசல் திருமேனியுடன் அந்த ஆறு திருமேனிகளையும் மன்னனுக்கு வழங்கினார். முசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்ற இந்த ஒரே உருவம் கொண்ட ஏழு திருமேனிகளும் பின்னர் ஏழு திருத்தலங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக மரபு வரலாறு கூறுகிறது.
வடமொழிச் சொல்லான சப்த என்பது ஏழு என்றும், விடங்கம் என்பது உளியால் செதுக்கப்படாதது என்றும் பொருள்படும். எனவே, இந்த ஏழு திருத்தலங்களும் சப்த விடங்கத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. விடங்கர் என்பது உளியால் செதுக்கப்படாத மூர்த்தியைக் குறிக்கும்.
| தாண்டவம் | விபரம் | தலம் |
|---|---|---|
| 1. உன்மத்த தாண்டவம்(நகர் விடங்கர்) | பக்தர்களின் அன்பை தாங்க முடியாமல் பித்து பிடித்தத் போல தாண்டவமாடுவது | திருநள்ளாறு |
| 2. அசபா தாண்டவம்(வீதி விடங்கர்) | மேலும் கீழும் ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாக சென்று வந்தும், அடியவர்கள் மந்திரத்தை மானசீகமாக ஏற்கும் நிலையில் உளம் மகிழ்ந்து ஆடுவதே புங்க தாண்டவம் | திருவாரூர் |
| 3. வீசி தாண்டவம்(சுந்தர விடங்கர்) | கடல் அலையை போலவே முன்னும் பின்னுமாகச் சென்றும், போவதுமாக தாண்டவமாடுவது | நாகப்பட்டினம் |
| 4. குக்குட தாண்டவம்(ஆதி விடங்கர்) | கோழியின் அசைவுகளை ஒத்து வெட்டி வெட்டி நடனம் ஆடிக் காட்டிய அற்புத திருத்தலம் | திருக்காறாயில் |
| 5. புருங்க தாண்டவம்(அவனி விடங்கர்) | தேன் சேகரிக்கும் போது ரீங்காரம் இட்டுக் கொண்டு அங்கும் இங்கும் அலையும் தேனீயைப் போல ஆடுவதே புருங்க தாண்டவம் | திருக்குவளை |
| 6. கமலா தாண்டவம்(நீல விடங்கர்) | தென்றல் காற்றில் அசைந்து ஆடும் தாமரை மலரின் அசைவுகளை போல தாண்டவமாடுவது | திருவாயமூர் |
| 7. அம்சபாத தாண்டவம்(புவன விடங்கர்) | அன்னம் போல சின்ன சின்னதாக அடி எடுத்து வைத்து மெதுவாகவும் மென்மையாகவும் தாண்டவமாடுவது | வேதாரண்யம் |
முக்கிய திருவிழாக்கள்
திருவிழா என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி இறைவனுக்கு நன்றி செலுத்தி கொண்டாடுவது. முக்கிய திருவிழாக்கள்:
- சிதம்பரம் - ஆருத்ரா தரிசனம் மற்றும் தேரோட்டம் - மார்கழி பவுர்ணமி, ஆனி திருமஞ்சனம் - ஆனி
- உத்தர கோச மங்கை - ஆருத்ரா தரிசனம் ( மார்கழி )
- திருவாரூர் - ஆழி தேரோட்டம் - மாசி
- திருவண்ணாமலை - தீபம் - கார்த்திகை
- காளஹஸ்தி - மஹா சிவராத்திரி ( மாசி ) பிரம்மோற்சவம்
- மதுரை - ஆவணி மூல புட்டு திருவிழா - ஆவணி, அஷ்டமி சப்பரம் - மார்கழி
- திருவையாறு - அப்பர் கயிலாய காட்சி - ஆடி அமாவாசை
- திருவஞ்சைக்களம் (கேரளா) - சுந்தரர் கயிலாய காட்சி - ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம்
- திருக்கழுகுகுன்றம் - லட்சதீப திருவிழா - கன்னி லக்னத்தில் குரு பகவான் பிரவேசிக்கும் நாள்
- கும்பகோணம் - மகாமக பெருவிழா - மாசி
*மேலே குறிப்பிட்டவற்றில் லட்ச தீப திருவிழா மற்றும் மகாமக பெருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். வருகின்ற 2028 இல் இந்த இரு திருவிழாக்களும் நடைபெறுகின்றது.
அஷ்ட வீரட்ட ஸ்தலங்கள்
அஷ்ட வீரட்ட ஸ்தலங்கள் என்பது சிவபெருமானின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிக்கும். அவை யாவும் தமிழ்நாட்டில் உள்ளன.
ஜோதிர் லிங்கம்
12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று ராமேஸ்வரம். மற்றவை வட இந்தியாவில் உள்ளன.
சக்தி பீடம்
சக்தி பீடங்களாக இருக்கும் தமிழ்நாட்டு ஸ்தலங்கள்:
- மதுரை - மீனாட்சி
- திருநெல்வேலி - காந்திமதி
- குற்றாலம் - பராசக்தி
- ராமேஸ்வரம் - பர்வதவர்த்தினி
சிவ பெருமானின் 64 வடிவங்கள்
முக்தி அளிக்கும் சிவ தலங்கள்
கீழ்கண்ட தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் முக்தி கிடைக்கும்:
- திருவாரூர் - பிறக்க முக்தி தருவது.
- சிதம்பரம் - தரிசிக்க முக்தி தருவது.
- திருவண்ணாமலை - நினைக்க முக்தி தருவது.
- அவினாசி - கேட்க முக்தி தருவது.
- திருவாலவாய் (மதுரை) – சொல்ல முக்தி தருவது.
- காஞ்சீபுரம் - வாழ முக்தி தருவது.
- காசி - இறக்க முக்தி தருவது.