இரும்புதல் திரிலோகநாதசுவாமி திருக்கோவில், வைப்புத் தலம்
சிவஸ்தலம்
இரும்புதல் (தற்போது இரும்புதலை என்று வழங்குகிறது)
இறைவன்
திரிலோகநாதசுவாமி
இறைவி
திரிலோகநாயகி
பதிகம்
அப்பர் (6-51-6)
எப்படிப் போவது
திருக்கருகாவூர் - சாலியமங்கலம் சாலையில் திருக்கருகாவூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் இரும்புதல் சிவாலயம் உள்ளது. சாலை ஓரத்திலேயே ஆலயம் உள்ளது.
ஆலய முகவரி
இரும்புதல்
இரும்புதல் அஞ்சல்
வழி. சாலியமங்கலம்
பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613504
ஆலய நேரம்
காலை : 8:00 - 9:00
மாலை : 6:00 - 8:00
பதிக குறிப்பு
பதிகப் பாடல் (6-51-6)
அப்பரின் 6-ம் திருமுறையில் 51-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பாடல் அப்பர் திருவீழீமீழலை பதிகத்தில் இடம் பெற்றுள்ளது.
பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பாழியார்
பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார்
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏரார் இன்னம்பரார் ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடும் கருகாவூரார்
கருப்பறியலூரார் கரவீரத்தார் விரும்பமரர் இரவுபகல் பரவியேத்த
வீழிமிழலையே மேவினாரே.
பொழிப்புரை
கரும்பு போன்று இனிய உமாதேவியோடு பெரும்புலியூரை விரும்பிய பெருமான், அவ்வூர் மூலத்தானம், அரதைப்பெரும்பாழி, இரும்புதல், இரும்பூளை, இன்னம்பர், கருகாவூர், கருப்பறியலூர், கரவீரம் என்ற இடங்களில் தங்கித் தம்மை விரும்பும் தேவர்கள் இரவும் பகலும் முன்னின்று புகழ்ந்து துதிக்குமாறு வீழிமிழலையையே விரும்பி அடைந்தார்.