தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

இடங்கொளூர் இடங்கொண்டீஸ்வரர் திருக்கோவில், வைப்புத் தலம்

சிவஸ்தலம்

இடங்கொளூர் (இன்றைய நாளில் கல்யாணபுரம் என்று வழங்குகிறது)

இறைவன்

இடங்கொண்டீஸ்வரர்

இறைவி

பிரஹத் சுந்தர குஜாம்பிகை

பதிகம்

சுந்தரர் (7-31-3)

ஆலய புகைப்படங்கள்
எப்படிப் போவது

கும்பகோணம் - வேப்பத்தூர் சாலை வழியில் திருவிசநல்லூருக்கு முன்பாகவே கல்யாணபுரம் என்ற ஊர் வரும். இவ்வூரில் சாலை ஓரத்திலேயே இடங்கொண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் திருக்கோவில்
கல்யாணபுரம்
திருவிசநல்லூர் அருகில்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612102

ஆலய நேரம்

காலை :  7:00 - 10:00

மாலை :  5:30 - 8:00

வரைபடம் – இடங்கொளூர் இடங்கொண்டீஸ்வரர் திருக்கோவில், வைப்புத் தலம்
சிறப்புக் குறிப்பு

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள காரிக்கரை, கடங்களூர், விடங்களூர் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

பதிக குறிப்பு
பதிகப் பாடல் (7-31-3)

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 31-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


கடங்களூர் திருக்காரிகரை கயிலாயம் விடங்களூர்
திருவெண்ணி அண்ணாமலை வெய்யபடங்கள் ஊர்கின்ற
பாம்பரையான் பரஞ்சோதிஇடங்கொளூர் ஊர்
எய்தமான் இடையாறு இடைமருதே.
பொழிப்புரை

கொடிய படங்களோடு ஊர்ந்து செல்கின்ற பாம்புகளை அரையில் உடையவனும், மேலான ஒளியாய் உள்ளவனும், யாவராலும் அடையப்படுபவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் கொள்ளுகின்ற ஊர்கள், செய்கடன்கள் நிரம்ப நிகழ்கின்ற காரிகரை, கயிலாயம், நீரும் தேனும் மிக்குப் பாய்கின்ற வெண்ணி, அண்ணாமலை, இடங்கொளூர், இடையாறு, இடைமருது என்னும் இவைகளே.

மேலும் சில புகைப்படங்கள்