A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
ஜலநாதேஸ்வரர் திருக்கோவில், திருஊறல் (தக்கோலம்)

சிவஸ்தலம் பெயர்: திருஊறல் (தற்போது தக்கோலம் என்று வழங்குகிறது)

இறைவன் பெயர்: ஜலநாதேஸ்வரர், உமாபதீஸ்வரர்

இறைவி பெயர்: கிரிராஜ கன்னிகாம்பாள்

பதிகம்: திருஞானசம்பந்தர் - 1

ஜலநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.

செல்லும் வழிகள்

1. காஞ்சிபுரத்தில் இருந்து: 49B எண் கொண்ட பேருந்து தக்கோலம் செல்கிறது.

2. காஞ்சிபுரம் - திருத்தணி வழி: காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் பேருந்தில் ஏறி, 22 கிமீ தொலைவில் உள்ள தக்கோலம் கூட்டு ரோடில் இறங்கி, அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் 5 கிமீ தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

3. ரயில் வழி: தக்கோலம் ரயில் நிலையத்தில் இருந்து 7.5 கிமீ தொலைவில் உள்ள கோவிலை ஷேர் ஆட்டோ மூலம் அடையலாம்.

பேருந்து வசதிகள் மிக குறைவாக உள்ளது.

திருமாதலம்பாக்கம்

தக்கோலம் கூட்டு ரோடில் இருந்து, தக்கோலம் செல்லும் வழியில் திருமால் சிவபூஜை செய்து இறைவன் கோடி சூரிய பிரகாசத்துடன் பொன்னிறமாக அவருக்கு காட்சி கொடுத்த திருமாதலம்பாக்கம் என்ற தலம் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில்
தக்கோலம் அஞ்சல்
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN - 631151
கோவில் நேரம்

காலை: 8:00 AM - 12:00 PM
மாலை: 4:30 PM - 8:00 PM

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
1 திருமாற்பேறு - 18 கிமி
2 திருவாலங்காடு, திருவிற்கோலம், இலம்பயங்கோட்டூர், தக்கோலம், திருமாற்பேறு ஆகிய தலங்களை இணைக்கும் வரைபடம்
வரைபடம்
கோவில் அமைப்பு
பொதுவான அமைப்பு

குசஸ்தலை என்னும் கல்லாற்றின் கரையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரளவில் சுற்றிலும் மதிற்சுவருடன் கூடிய மேற்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன.

வெளிப் பிராகாரம்

கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும் தனிக்கோயிலாகவுள்ளது. நந்திக்கு எதிரில் உள்சுற்றுச் சுவரில் ஒரு சாளரம் உள்ளது.

அம்பிகை சந்நிதி

வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தெற்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கிய அம்பிகை சந்நிதி தனிக் கோவிலாக ஒரு முன் மண்டபத்துடன் உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில், அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். இச்சந்நிதிக்குப் பக்கத்தில் தனியே உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி கம்பீரமாக உள்ளது.

மூலவர் சந்நிதி

அம்பிகை சந்நிதிக்கு எதிரே சுவாமி சந்நிதிக்குச் செல்ல பக்கவாயில் உள்ளது. இதன் வழியே உள்ளே சென்று மேற்கிலுள்ள உள்வாயில் வழியே துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கி உள்ளே சென்றால் ஒரு புறத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. அடுத்துள்ள மண்டபத்தில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன.

அடுத்துள்ள மேற்கு நோக்கிய உள் வாயிலைக் கடந்து சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். நேரே மூலவர் தரிசனம். சிவலிங்கத் திருமேனி மணலால் ஆனது. தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.

உட்பிராகார சந்நிதிகள்

உள் பிராகாரத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்கள்

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன. இவற்றுள் துர்க்கை நீங்கலாக உள்ள மற்ற திருமேனிகள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே உள்ளன.

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் உள்ள மகாவிஷ்ணுவும் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமாகக் கொண்டு, இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார். பிரம்மாவும் அமர்ந்த நிலை.

விஷ்ணுதுர்க்கை

விஷ்ணுதுர்க்கை அமைப்பு நின்ற நிலையினதாயினும் அழகான வேலைப்பாடுடன் உள்ளது. இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்து ஒன்றால் கீழேயுள்ள மகிஷத்தை காலூன்றி, (குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில்) நிற்கும் அற்புதமான திருக்கோலம் காணத்தக்கது.

தல புராண வரலாறு
திருஊறல் பெயர்க்காரணம்

நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாலும், இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல் என்று பெயர்.

தக்கோலம் பெயர்க்காரணம்

இறைவனை அழைக்காமல் அவமதித்து தக்கன் நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம் இதுதான் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு "ஓ" என்று ஓலமிட்டதால் தக்கோலம் என்று பெயர் பெற்றதாக உள்ளூர்ச் செய்தி அறிவிக்கின்றது.

சத்யகங்கை தீர்த்தம்

வடக்கு மதிலோரத்திலுள்ள கங்காதரர் சந்நிதியின் மேற்குப் பிராகாரத்தில் சத்யகங்கை தீர்த்தம் உள்ளது. இதன் கரையிலுள்ள நந்தியின் வாயிலிருந்து தான் கங்கை நீர் பெருகி வந்தது. உததி முனிவர் வழிபட்டு அவர் வேண்டிக்கொண்டபடி நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம். இப்போதும் கல்லாற்றில் நீர்ப்பெருக்கு உண்டாயின் அப்போது நந்தி வாயில் நீர் விழும் என்று சொல்கிறார்கள்.

வரலாற்றுச் செய்தி

இதே தக்கோலத்தில்தான் கி.பி. 949 ஆம் வருடம் தக்கோலப் போர் நடைபெற்றது. இந்தப் போரில் இராஜாதித்தர் தலைமையிலான முதலாம் பராந்தக சோழனின் சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் தலைமையிலான இராட்டிரகூட படையும் மோதின. சோழ இளவரசர் இராஜாதித்தர் கொல்லப்பட்டார்.

பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. மாறில் அவுணரரணம் மவைமாயவோர்
மேலும் புகைப்படங்கள்