A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
சகலபுவனேஸ்வரர் திருக்கோவில், திருமீய்ச்சூர் இளங்கோவில்

சிவஸ்தலம் பெயர்: திருமீய்ச்சூர் இளங்கோவில்

இறைவன் பெயர்: சகலபுவனேஸ்வரர்

இறைவி பெயர்: வித்வன் மேகலாம்பாள், மின்னு மேகலையாள்

பதிகம்: திருநாவுக்கரசர் - 1

சகலபுவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

திருமீய்ச்சூர் மேகநாதர் கோவிலின் உள்ளே வடக்குப் பிரகாரத்தில் திருமீய்ச்சூர் இளங்கோவில் தலம் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு மேகநாதர் (சகலபுவனேஸ்வரர்) திருக்கோயில்
திருமீயச்சூர்
திருமீயச்சூர் அஞ்சல்
வழி பேரளம்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609405
ஆலய நேரம்

காலை: 6:00 - 12:00
மாலை: 4:30 - 8:45

கோவில் அமைப்பு

திருமீயச்சூர் மேகநாதசுவாமி கோயிலின் உள்ளே வடக்குப் பிரகாரத்தில் திருமீயச்சூர் இளங்கோயில் என்றொரு தனிக்கோவில் உள்ளது. இதில் கிழக்கு நோக்கி இறைவன் சகல புவனேச்வரரும், தெற்கு நோக்கி இறைவி மின்னு மேகலையாளும் தனித்தனி கருவறையில் வீற்றிருக்கக் காணலாம். இறைவன், இறைவி சந்நிதிகள் அநேக நேரங்களில் மூடியே காணப்படுகின்றன.

அப்பர் பெருமான் தனது பதிகத்தின் 6-வது பாடலில் இத்தல இறைவியை மின்னு மேகலையாள் என்று குறிப்பிடுகிறார். இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தில் வழக்கமாக துர்க்கை காணப்படும் இடத்தில் சதுர்முக சண்டிகேஸ்வரர் காணப்படுகிறார்.

பதிகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்துப் பதிகம்
  1. தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்