உருத்திரகோடி ருத்ரகோடீஸ்வரர் திருக்கோவில் - வைப்புத் தலம்
சிவஸ்தலம்
உருத்திரகோடி (ருத்திரன் கோவில், திருக்கழுக்குன்றம்)
இறைவன்
ருத்ரகோடீஸ்வரர்
இறைவி
திரிபுரசுந்தரி
பதிகம்
அப்பர் (6-70-8)
எப்படிப் போவது
சென்னையில் இருந்து செங்கல்பட்டு சென்று அங்கிருந்து - மகாபலிபுரம் செல்லும் சாலை வழியில் திருக்கழுக்குன்றம் இருக்கிறது. திருக்கழுக்குன்றத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. பாடல் பெற்ற தலமான வேதகிரீஸ்வரர் திருக்கோவில் மலை மேலும், மலை அடிவாரத்தில் பக்தவத்சலேஸ்வரர் திருக்கோவிலும் உள்ளன. பக்தவத்சலேஸ்வரர் திருக்கோவிலின் சங்கு தீர்த்தம் திருக்குளத்திற்குத் தென் கிழக்கில் உருத்திரகோடீ ருத்திரன் கோவில் என்ற இந்த வைப்புத் தலக்கோவில் உள்ளது.
ஆலய முகவரி
ருத்திரன் கோவில்
திருக்கழுக்குன்றம் அஞ்சல்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 603109
ஆலய நேரம்
காலை : 7:00 - 12:00
மாலை : 5:00 - 8:30
பதிக குறிப்பு
பதிகப் பாடல் (6-70-8)
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங் கயிலாய நாதனையே காணலாமே.
பொழிப்புரை
உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.
கூடுதல் குறிப்புகள்
இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்ட பிற வைப்புத் தலங்கள்
இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள உஞ்சேனை மாகாளம், பொதியமலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம், வேதீச்சரம், விவீச்சுரம், கஞ்சாறு, வெற்றியூர், பஞ்சாக்கை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.