தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

இறையான்சேரி விஸ்வநாதர் திருக்கோவில் - வைப்புத் தலம்

சிவஸ்தலம்

இறையான்சேரி

இறைவன்

விஸ்வநாதர்

இறைவி

விசாலாட்சி

பதிகம்

அப்பர் (6-70-4)

இறையான்சேரி ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

திருவாரூர் - கீவளூர் சாலையில் நீலப்பாடி என்ற ஊரை அடைந்து அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் சென்று இறையான்சேரி தலத்தை அடையலாம். நீலப்பாடியில் விசாரித்துக் கொண்டு செல்ல வேண்டும்.

ஆலய முகவரி

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோவில்
இரவாஞ்சேரி
இரவாஞ்சேரி அஞ்சல்
நீலப்பாடி வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 611105
முற்றிலும் சிதிலமடைந்த இவ்வாலயத்தில் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது.
வரைபடம் – இறையான்சேரி விஸ்வநாதர் திருக்கோவில் - வைப்புத் தலம்
பதிக குறிப்பு
பதிகப் பாடல் (6-70-9)

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 10-வது பாடலிலும், 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 9-வது பாடலிலும் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


எச்சி லிளமர் நல்லூர்
இலம்பையங் கோட்டூர் இறையான்சேரி
அச்சிறுபாக்கம் அளப்பூர் அம்பர்
ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறை
கைச்சினம் கற்குடி கச்சூர் ஆலக்
கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி
கச்சிப்பலதளியும் ஏகம்பத்துங்
கயிலாயநாதனையே காணலாமே.
பொழிப்புரை

எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங்கோட்டூர், இறையான்சேரி, அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர், ஆவடுதுறை, அழுந்தூர், ஆறை, கைச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக் கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி, கச்சிப்பலதளி, ஏகம்பம் ஆகிய இவற்றில் கயிலாயநாதனைக் காணலாம்.

கூடுதல் குறிப்புகள்
ஆலயத்தின் இன்றைய நிலை

அப்பர் பெருமானால் வைப்புத்தலமாக குறிப்பிடப்பட்ட இத்தலம் இன்று முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. மற்ற எல்லா சந்நிதிகளும் இடிந்து விட்ட நிலையில் இறைவன் கருவறை மட்டும் இன்று வரை தாக்குப் பிடித்துக் கொண்டு செங்கல் சுற்றுச் சுவற்றுடன் காணப்படுகிறது. இறைவன் கருவறைக்குள் இறைவன், இறைவி மற்றும் விநாயகர் சந்நிதிகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மிக அருகிலுள்ள குறுமணங்குடி என்ற தலத்திலுள்ள சிவாலயம் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குறுமணங்குடி தலத்து அர்ச்சகர் தான் இறையான்சேரி தலத்திற்கு வந்து ஒரு கால பூஜையை செய்து விட்டு செல்கிறார்.

இதே பெயரில் மற்றொரு தலம்

சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டைக்கு அருகில் இறையான்சேரி (இறகுசேரி) என்ற பெயரில் ஒரு ஊர் உள்ளது. இவ்வூரிலுள்ள சிவாலயத்தில் உள்ள இறைவன் மும்முடிநாதர் என்றும் இறைவி சௌந்தர நாயகி என்றும் வழிபடப் படுகின்றனர். இத்தலமும் இறையான்சேரி வைப்புத் தலமாக போற்றப்படுகிறது.

இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்ட பிற வைப்புத் தலங்கள்

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள எச்சில் இளமர், ஏமநல்லூர், அளப்பூர், ஆறை, கச்சிப்பலதளி ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.