ஆபத்சகாயநாதர் திருக்கோவில், திருப்பழனம்
சிவஸ்தலம்
திருப்பழனம்
இறைவன்
ஆபத்சகாயநாதர்
இறைவி
பெரியநாயகி
பதிகம்
திருநாவுக்கரசர் - 5
திருஞானசம்பந்தர் - 1
ஆபத்சகாயநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
திருவையாறு - கும்பகோணம் பேருந்து வழியில் திருவையாற்றில் இருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி
திருப்பழனம்
திருப்பழனம் அஞ்சல்
வழி திருவையாறு
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613204
ஆலய நேரம்
காலை : 9:00 - 11:00
மாலை : 5:00 - 7:00
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
அருகில் உள்ள திவ்யதேசம்
கோவில் அமைப்பு
ஆலயம் ஒரு ராஜகோபுரத்துடனும் அடுத்து ஒரு உள்கோபுரத்துடனும் அமைந்துள்ளது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடதுபுறம் பிராகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.
மூலவரும் அம்பாளும்
உள்மண்டபத்தில் நுழைந்ததும் நேரே மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் இங்கு சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா வெளிச்சம் சுவாமியின் மேல்படுகிறது. கருவறை தென்பற கோஷ்டத்தில் நடுவில் ஜடாமுடி, நெற்றிக் கண்ணுடன் சிவனும், இடதுபக்கம் தட்சிணாமூர்த்தியும், வலதுபுறம் கஜசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர். வெளிப்பிராகாரத்தில் அம்பாள் பெரியநாயகி சந்நிதி உள்ளது. பலாமரம், தலமரமான வாழை உள்ளன. ஆலயம் முழுவதும் அழகிய சிற்பங்களுடன் விளங்குகிறது. திருப்பழனம் ஆலயத்தை ஒரு கலைப் பெட்டகம் என்றே கூறலாம்.
தல வரலாறு
சப்தஸ்தான தலங்களில் திருப்பழனம்
குபேரன், திருமால், திருமகள், சந்திரன், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறு பெற்ற தலமான திருப்பழனம் திருவையாற்றைச் சார்ந்த சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.
நவக்கிரக தலங்களில் சந்திரனுக்கு உரியதான திங்களூர் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இது அப்பூதி அடிகளின் அவதாரத் தலம். அப்பர் பெருமான் தனது பதிகங்களில் அப்பூதி அடிகளின் தொண்டினைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். ஆலயத்தின் இராஜகோபுரத்தில் சுதைச் சிற்பமாக "திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல்" காட்சி அளிப்பதைப் பார்க்கலாம். விடம் தீர்த்த பதிகம் என்று போற்றப்படும் "ஒன்று கொலாம்" என்ற பதிக நிகழ்ச்சிக்கு இடமான தலம் திருப்பழனம்.
பதிகம்
திருஞானசம்பந்தர்
ஆபத்சகாயநாதர் ஆலயம் புகைப்படங்கள்