இப்பதிகப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள உஞ்சேனை மாகாளம், உருத்திர கோடி, பொதியமலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகியவையும் வைப்புத் தலங்களாகும்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | வேதீச்சுரம் (இந்நாளில் சோமங்கலம் என்று அழைக்கப்படுகிறது) |
| இறைவன் பெயர் | சோமநாதீஸ்வரர் |
| இறைவி பெயர் | காமாட்சி |
| பதிகம் | அப்பர் (6-70-8) |
| எப்படிப் போவது | ஶ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் ஶ்ரீபெரும்புதூரில் இருந்த சுமார் 16 கி.மீ. தொலைவில் சோமங்கலம் உள்ளது. குன்றத்தூரில் இருந்தும் சோமங்கலம் வரலாம். |
| ஆலய முகவரி | அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோவில் சோமங்கலம் வழி குன்றத்தூர் சென்னை PIN - 602109 |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திர கோடி மறைக்காட்டுள்ளும் மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானங் கேதாரத்தும் வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும் கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங் கயிலாய நாதனையே காணலாமே. பொழிப்புரை உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திர கோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.