தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இப்பதிகப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மந்தாரம், வாரணாசி, விளத்தொட்டி, பிரம்பில், கண்ணை, காறை ஆகியவையும் வைப்புத் தலங்களாகும்

கீவளுர் வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டத்திலுள்ள தேவூர் ஒரு பாடல் பெற்ற சிவஸ்தலம். தேவூர் தலத்திற்கு விராடபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே திருநாவுக்கரசர் தனது பதிகத்தில் வைப்புத் தலமாக குறிப்பிட்ட (6-70-6) விராடபுரம் என்ற தலப்பெயர் தேவூராக இருக்கலாம் என்று கருதுவதற்கும் இடமுண்டு. தேவூர் தலத்திற்கு சம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்விராடபுரம் (இந்நாளில் தாராபுரம் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்அகத்தீஸ்வரர்
இறைவி பெயர்அகிலாண்டேஸ்வரி
பதிகம்அப்பர் (6-70-6)
எப்படிப் போவது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களில் தாராபுரமும் ஒன்று. கரூர், பழனி, கோயமுத்தூர், பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது..
ஆலய முகவரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்
தாராபுரம்
தாராபுரம் வட்டம்
திருப்பூர் மாவட்டம்
PIN - 638673
விராடபுரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணைஅருட்டுறை தண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர் காறை கழிப்பாலையுங்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை: 			www.thevaaram.org

மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை, மந்தாரம், வாரணாசி, வெண்ணி, 
விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களம், பெண்ணையாற்றங்கரையிலுள்ள 
அருட்டுறை, பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெருவேளூர், கண்ணை, களர், 
காறை, கழிப்பாலை முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.