இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள கடங்களூர், திருக்காரிகரை, இடங்கொளூர் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
முகப்பு வாயில்
நந்தி மண்டபம்
மூலவர் அகத்தீஸ்வரர்
இறைவி சத்யாயதாட்சி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | விடங்களூர் |
| இறைவன் பெயர் | அகத்தீஸ்வரர் |
| இறைவி பெயர் | சத்யாயதாட்சி |
| பதிகம் | சுந்தரர் (7-31-3) |
| எப்படிப் போவது | திருவிசைப்பா தலமான சாட்டியக்குடியில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் விடங்களூர் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் விடங்களூர் வழி வலிவலம் கீழ்வேளூர் வட்டம் நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 610207 |
சுந்தரரின் 7-ம் திருமுறையில் 31-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் இடையாறு பாடல் பெற்ற தலத்தைப் பற்றி பாடியருளிய பதிகமாகும்.
கடங்களூர் திருக்காரிகரை கயிலாயம் விடங்களூர் திரு வெண்ணி அண்ணாமலை வெய்ய படங்கள் ஊர்கின்ற பாம்பரை யான் பரஞ்சோதி இடங்கொளூர் எய்த மான் இடையாறு இடைமருதே. பொழிப்புரை : கொடிய, படங்களோடு ஊர்ந்து செல்கின்ற பாம்புகளை அரையில் உடையவனும், மேலான ஒளியாய் உள்ளவனும், யாவராலும் அடையப்படுபவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் கொள்ளுகின்ற ஊர்கள் கடங்களூர், விடங்களூர், செய்கடன்கள் நிரம்ப நிகழ்கின்ற காரிகரை, கயிலாயம், நீரும் தேனும் மிக்குப் பாய்கின்ற வெண்ணி, அண்ணா மலை, இடையாறு, இடைமருது என்னும் இவைகளே.