தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள மாட்டூர், மயிண்டீச்சரம், வாரணாசி, காட்டூர், கொடுங்கோவலூர், குணவாயில் முதலியன தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்வாதவூர்
இறைவன் பெயர்திருமறைநாதர், வேதபுரீஸ்வரர்
இறைவி பெயர்வேதநாயகி
பதிகம்சம்பந்தர் (2-39-7)
எப்படிப் போவது மதுரை - மேலூர் சாலையில் ஒத்தக்கடை அடைந்து அங்கிருந்து திருமோகூர் (108 திவ்யதேசங்களில் ஒன்று) செல்லூம் சாலையில் திருமோகூரைக் கடந்து திருவாதவூரை சென்று அடையலாம். மதுரையில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவு. திருச்சியில் இருந்து வருபவர்கள் திருச்சி - மதுரை சாலையில் மேலூர் அடைந்து அங்கிருந்து வாதவூர் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 9 கி.மீ, சென்றால் வாதவூர் திருமறைநாதர் ஆலயத்தை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு திருமறைநாதர் திருக்கோவில்
வாதவூர்
மேலூர் வட்டம்
மதுரை மாவட்டம்
PIN - 625110

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்
வாதவூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் ஷேத்திரக்கோவை என்று கூறப்படும்.


மாட்டூர் மடப் பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும்
கோட்டூர் திருவாமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திருக் குணவாயில்.
குறிப்புரை :
இப்பாடலின்  முழுப்பகுதி கிடைக்கவில்லை.

பொழிப்புரை :
மாட்டூர் பாச்சில் ஆச்சிராமம், மயிண்டீச்சரம், வாதவூர், வாரணாசி, காட்டூர், 
கடம்பூர், ஒற்றியூர், கோட்டூர், திருவாமாத்தூர், கோழம்பம், கொடுங்கோவலூர் 
முதலியன இறைவன் உறையும் சிறந்த தலங்கள்.

வாதவூர் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps