இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள தென்னூர், தேவனூர், பொன்னூர் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | புரிசை நாட்டு புரிசை |
| இறைவன் பெயர் | அகத்தீஸ்வரர் |
| இறைவி பெயர் | அகிலாண்டேஸ்வரி |
| பதிகம் | சுந்தரர் (7-12-6) |
| எப்படிப் போவது | செய்யாறு - வந்தவாசி சாலை வழியில் செய்யாற்றில் இருந்து தென் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் புரிசை உள்ளது. |
| ஆலய முகவரி | அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் புரிசை கிராமம் புரிசை அஞ்சல் வழி அனக்காவூர் செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் PIN - 604411 |
சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
தென்னூர் கைம்மைத் திருச்சுழி யற்றிருக் கானப்பேர் பன்னூர் புக்கு உறையும் பர மற்கு இடம் பாய்நலம் என்னூர் எங்கள் பிரான் உறையும் திருத்தேவனூர் பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசைநாட்டுப் புரிசையே. பொழிப்புரை : சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தலங்களிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு இடமாய், பரவிய புகழையுடையன எவ்வூர்கள் என்றால், அவை எங்கள் பெருமான் எழுந்தருளியுள்ள தென்னூர், ஒழுக்கம் நிறைந்த சுழியல், கானப்பேர், தேவனூர், பொன்னூர் நாட்டிலுள்ள பொன்னூர், புரிசை நாட்டிலுள்ள புரிசை என்பவை