தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள நெடுவாயில், நெற்குன்றம், உஞ்சேனை மாகாளம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்நற்குன்றம் (இன்றைய நாளில் திண்ணகோணம் என்று பெயர்)
இறைவன் பெயர்பசுபதீஸ்வரர்
இறைவி பெயர்கோவிந்தவல்லி
பதிகம்சம்பந்தர் (2-39-9)
எப்படிப் போவது திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து கிழக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் திண்ணகோணம் என்று இந்நாளில் அறியப்படும் நற்குன்றம் வைப்புத் தலம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
திண்ணகோணம்
திண்ணகோணம் அஞ்சல்
முசிறி வட்டம்
திருச்சி மாவட்டம்
PIN - 621202

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திரந்திருக்கும்.
நற்குன்றம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல் 
நெடுவாயில் குறும்பலா நீடு
திருநற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் 
நளிர்சோலை உஞ்சேனைமாகாளம் வாய்மூர்
கற்குன்றம் ஒன்று ஏந்தி மழைதடுத்த 
கடல் வண்ணனும் மாமலரோனும் காணாச்
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் 
குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.
முசிறியில் இருந்து நற்குன்றம் (திண்ணகோணம்) இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps