தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள நெடுவாயில், நற்குன்றம், உஞ்சேனை மாகாளம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்நெற்குன்றம் (இன்றைய நாளில் திண்ணகுளம் என்று பெயர்)
இறைவன் பெயர்நெற்குன்றநாதர்
இறைவி பெயர்குந்தளாம்பிகை
பதிகம்சம்பந்தர் (2-39-9)
எப்படிப் போவது திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவிலும், பாடல் பெற்ற சிவஸ்தலம் மழபாடியில் இருந்து மேற்கே விரகலூர் வழியாக சுமார் 13 கி.மீ. தொலைவிலும் திண்ணகுளம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு நெற்குன்றநாதர் திருக்கோவில்
திண்ணகுளம்
வழி விரகலூர்
புள்ளம்பாடி வட்டம்
திருச்சி மாவட்டம்
PIN - 62172

இவ்வாலயத்தில் தினந்தோறும் காலையில் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. மாலை நேரத்தில் விளக்கு மட்டும் ஏற்றப்படுகிறது. சிதிலமடைந்த கோவில்.
நெற்குன்றம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல் 
நெடுவாயில் குறும்பலா நீடு
திருநற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் 
நளிர்சோலை உஞ்சேனைமாகாளம் வாய்மூர்
கற்குன்றம் ஒன்று ஏந்தி மழைதடுத்த 
கடல் வண்ணனும் மாமலரோனும் காணாச்
சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் 
குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.
மழபாடியில் இருந்து நெற்குன்றம் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps