தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் அப்பரின் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள பழையாறு, நாலாறு, வளைகுளம், தளிக்குளம், இடைக்குளம், திருக்குளம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

Thellaaru route map வந்தவாசியில் இருந்து தெள்ளாறு செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தெள்ளாறு
இறைவன் பெயர்திருமூலட்டானேஸ்வரர்
இறைவி பெயர்அகிலாண்டேஸ்வரி
பதிகம்அப்பர் (6-71-10), சுந்தரர் (7-92-9)
எப்படிப் போவது வந்தவாசி - திண்டிவனம் பாதையில் 14 கி.மீ. தொலைவில் தெள்ளாறு உள்ளது. தெள்ளாறு பேருந்து நிறுத்தத்திற்கு அருகே கோவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு திருமூலட்டானேஸ்வரர் திருக்கோவில்
ஈஸ்வரன் கோவில் தெரு
தெள்ளாறு
தெள்ளாறு அஞ்சல்
வந்தவாசி வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN - 604406

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது.
தெள்ளாறு வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்பூந்துருத்தியில் தங்கியிருந்த போது பாடிய பதிகமாகும்.


நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு    (6-71-10)
நலம் திகழும் நாலாறும் திருவையாறும்
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல்
இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம்
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும்
குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே.

பொழிப்புரை : 

நள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நலம் திகழும் நாலாறு, திருவையாறு, தெள்ளாறு, 
வளைகுளம், தளிக்குளம், நல்ல இடைக்குளம், திருக்குளம், அஞ்சைக்களம், 
குறையாத சிறப்புடைய நெடுங்களம், வேட்களம், நெல்லிக்கா, கோலக்கா, 
ஆனைக்கா, பரந்து திகழும் கோடிகா என்றெல்லாம் தேன் நிறைந்த கொன்றைப் பூ 
மாலை அணிந்த சிவபெருமான் விளங்கும் ஆறு, குளம், களம், கா ஆகிய 
எல்லாவற்றையும் கூறுவோம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 92-வது பதிகத்தில் 9-வது பாடலிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருப்புக்கொளியூர் (அவினாசி) தலத்திற்குரிய பதிகமாகும்.


நள்ளாறு தெள்ளாறு அறரத்துறைவாய் எங்கள் நம்பனே   (7-92-9)
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள் ஏறு சோலைப் புக்கொளியூரில் குளத்து இடை
உள் ஆடப்புக்க மாணி என்னைக் கிறி செய்ததே

பொழிப்புரை :

திருநள்ளாறு, தெள்ளாறு, திரு அரத்துறைகளில் உள்ள நம்பனே, 
வெள்ளாடையை விரும்பாது, புலித்தோல் ஆடையை விரும்புபவனே, 
பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக்கொளியூரில் உள்ள 
குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது?
தெள்ளாறு திருமூலட்டானேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
திருமூலட்டானேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி
பைரவர் சனீஸ்வரன்