தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இப்பதிகப் பாடலில் குறிப்படப்பட்டுள்ள தாழையூர், தக்களூர் என்பவையும் தேவார வைப்புத் தலங்களாகும்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தகட்டூர்
இறைவன் பெயர்பைரவநாதசுவாமி, சிவலோக நாதர்
இறைவி பெயர்சிவகாமசுந்தரி
பதிகம்சுந்தரர் (7-12-1)
எப்படிப் போவது திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் உள்ள வாய்மேடு என்று ஊருக்கு அருகில் தகட்டூர் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு பைரவநாதசுவாமி திருக்கோவில்
தகட்டூர்
வழி வாய்மேடு
வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 614714

ஆலயம் தினந்நோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தகட்டூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


வீழக் காலனைக் கால்கொடு 
பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந்தான் இடங்
கொண்டது கோவலூர்
தாழையூர் தகட்டூர் தக்க
ளூர் தருமபுரம்
வாழை காய்க்கும் வளர்மரு
கல் நாட்டு மருகலே

பொழிப்புரை :

கூற்றுவனை, அவன் உயிரற்று விழுமாறு காலால் உதைத்த கயிலாய நாதனும், 
நடை நிரம்பாத எருதினை ஏறுதலை விரும்பியவனுமாகிய இறைவன் தனக்கு 
இடமாகக்கொண்ட ஊர், திருக்கோவலூர், தாழையூர், தகட்டூர், தக்களூர், 
தருமபுரம், வாழைகள் காய்க்கின்ற, செல்வம் வளர்கின்ற மருகல் நாட்டில் 
உள்ள மருகல் என்பவை

கோவிலின் மாமண்டபத்தில் யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா சக்தி வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. இத்தலத்திற்கு யந்திரபுரி என் பெயரும் உண்டு இதுவே தமிழில் (தகடு)யந்திரம்) + ஊர்(புரி)) தகட்டூர் என்றழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் பிரதான மூர்த்தியாக பைரவநாதசுவாமி மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளார். பிராகாரம் சுற்றி வரும் போது சிவலோக நாதர் மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோரின் சந்நிதிகள் இருப்பதைக் காணலாம்.

Thagattur route map திருத்துறைப்பூண்டியில் இருந்து தகட்டூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps