இப்பதிகப் பாடலில் குறிப்படப்பட்டுள்ள இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, தக்களூர், கோத்திட்டை, கோட்டுக்காடு ஆகியவையும் தேவாரவைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | சாலைக்குடி (இன்றைய நாளில் சாயல்குடி என்று அழைக்கப்படுகிறது) |
| இறைவன் பெயர் | கைலாசநாதர் |
| இறைவி பெயர் | மீனாட்சியம்மன் |
| பதிகம் | அப்பர் (6-70-3) |
| எப்படிப் போவது | இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரத்தில் இருந்து சுமார் 53 கி.மீ. தொலைவிலும், முதுகுளத்தூரில் இருந்து தெற்கே சுமார் 32 கி.மீ. தொலைவிலும் சாயல்குடி உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் சாயல்குடி கடலாடி வட்டம் இராமநாதபுரம் மாவட்டம் PIN - 623120 இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
இடைமரு தீங்கோ யிராமேச் சரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர் சடைமுடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாய நாதனையே காணலாமே பொழிப்புரை : இடைமருது, ஈங்கோய், இராமேச்சரம், இன்னம்பர், ஏர்இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்