தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இப்பதிகப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கொடுங்கோளூர், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், நியமநல்லூர், எழுமூர், ஏழூர், தோழூர், ஏமகூடமலை ஆகியவையும் தேவாரவைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்செங்குன்றூர் (இன்றைய நாளில் செங்கண்ணூர் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்மகாதேவர்
இறைவி பெயர்பார்வதி
பதிகம்அப்பர் (6-70-5)
எப்படிப் போவது கேரளா மாநிலத்திலுள்ள திருவல்லா என்ற ஊரில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் செங்கண்ணூர் என்னும் இத்தலம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு மகாதேவர் திருக்கோவில்
செங்கண்ணூர்
செங்கண்ணூர் அஞ்சல்
ஆலப்புழை மாவட்டம்
கேரளா மாநிலம்
PIN - 689121

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
செங்குன்றூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர்
கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவு
நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பா வனம் எழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏராரும் ஏமகூடங்
கடம்பை இளங்கோயில் தன்னினுள்ளுங்
கயிலாய நாதனையே காணலாமே

பொழிப்புரை :

கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்கா, 
நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்கா, நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், 
எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், அழகிய ஏமகூடம், கடம்பை இளங் கோயில் 
ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்
sengannur route map திருவல்லா பந்தளம் சாலை வழியில் செங்கண்ணூர் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps