இப்பதிகப் பாடலில் குறிப்படப்பட்டுள்ள சோமேச்சரம், ஊற்றத்தூர், கறையூர் ஆகியவையும் வைப்புத் தலங்களாகும்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | சூலமங்கை |
| இறைவன் பெயர் | கிருத்தி வாகேஸ்வரர் |
| இறைவி பெயர் | அலங்காரவல்லி, திரிபுரசந்தரி |
| பதிகம் | அப்பர் (6-70-10) |
| எப்படிப் போவது | தஞ்சாவூர் கும்பகோணம் பேருந்து சாலையில் ஐயம்பேட்டை வந்து இரயில்வே நிலையச் சாலையில் சென்றால் சூலமங்கை என்னும் இத்தலம் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு கிருத்தி வாகேஸ்வரர் திருக்கோவில் சூலமங்கை அய்யம்பேட்டை அஞ்சல் பாபாநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 609309 இவ்வாலயம் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை தோணிபுரம் துருத்தி சோமேச்சரம் உறையூர் கடல் ஒற்றியூரூம் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்துங் கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாய நாதனையே காணலாமே பொழிப்புரை : நறையூரிலுள்ள சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சரம், நல்லூர், மேம்பட்ட துறையூர், சோற்றுத்துறை, சூல மங்கை, தோணிபுரம், துருத்தி, சோமேச்சரம், உறையூர் கடலை அடுத்த ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஒப்பற்ற ஏடகம், கறையூர், கருப்பறியல், கன்றாப்பூர் ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்