தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | சித்தவடம் (இன்றைய நாளில் கோட்லம்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது) |
| இறைவன் பெயர் | சிதம்பரேஸ்வரர் |
| இறைவி பெயர் | சிவகாமசுந்தரி |
| பதிகம் | அப்பர் (4-2-3) |
| எப்படிப் போவது | பன்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து வடமேற்கே 4 கி.மீ. தொலைவில் சித்தவடம் சிதம்பரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் சித்தவடம் கோட்லம்பாக்கம் அஞ்சல் பன்ருட்டி வட்டம் கடலூர் மாவட்டம் PIN - 607108 இவ்வாலயம் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
ஒத்த வடத்திள நாக முருத்திர பட்ட மிரண்டும் முத்து வடக்கண் டிகையு முளைத்தெழு மூவிலை வேலும் சித்தவடமும் அதிகைச் சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து தத்துங் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை பொழிப்புரை : தோளில் மாலையாக அணிந்த இளைய பாம்பும் , இரண்டாகிய தோள் பட்டிகையும் , பலவடங்களாக அமைந்த முத்து மாலையினை இணைந்த உருத்திராக்கக் கண்டிகையும் , மூன்று இலைவடிவாக அமைந்த முத்தலைச் சூலமும் , சித்தவடம் என்ற பெயரிய சைவமடம் ஒன்றுடைய திருத்தலமும், மதில்கள் உயரமாக உடைய அதிகை நகரை ஒருபுறம் சூழ்ந்து இயங்கும் விரைந்து செல்லும் கெடில நதித் தீர்த்தமும் உடைய பெருமானுடைய அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை
பன்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சித்தவடம் சிவன் கோவிலுக்கு செல்லும் வழி வரைபடம்