தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


சம்பந்தர் பதிகப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கூரூர், தென்கோடி, பீடார் ஆகியவையும் வைப்புத் தலங்களாகும்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கூரூர் (இன்றைய நாளில் கூகூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்ஆம்ரவனேஸ்வரர்
இறைவி பெயர்மங்களநாயகி
பதிகம்சம்பந்தர் (2-39-1)
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக சுமார் 15 கி.மீ.தொலைவில் கூஹூர் உள்ளது. நாச்சியார்கோவிலில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு.
ஆலய முகவரி அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்
கூரூர்
கூகூர் அஞ்சல்
வழி நாச்சியார்கோவில் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612602
கூரூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருஞானசம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


ஆரூர் தில்லையம்பலம் வல்லம் நல்லம்
  வடகச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
  கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயல் நின்றியூர் குன்றியூரும்
  குருகாவையூர் நாரையூர் நீடு  கானப்
பேரூர் நன்னீள் வயல் நெய்த்தானமும்
  பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே.

பொழிப்புரை :

பிறைசூடிய பெருமானின் பெருந்தலங்களாய ஆரூர், தில்லையம்பலம், திருவல்லம், திருநல்லம், 
அச்சிறுபாக்கம், கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி, திருக்கழிப்பாலை, தென்கோடி, பீடார், 
நின்றியூர், குன்றியூர், குருகாவையூர், நாரையூர், கானப்பேரூர், நெய்த்தானம் முதலான 
தலங்களின் பெயர்களைப் பலகாலும் சொல்லிக்கொண்டிரு. உனக்குப் பெரும்பயன் விளையும்.
kundriyur route mapகும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் வழியாக கூரூர் (கூகூர்) சிவன் கோவிலுக்கு செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps