தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள திண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், அசோகந்தி ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

kumarikongu route mapநாமக்கல்லில் இருந்து மோகனூர் அசலதீபேஸ்வரர் சிவன் கோவிலுக்கு செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்குமரி கொங்கு (இன்றைய நாளில் மோகனூர் என்று பெயர்)
இறைவன் பெயர்அசலதீபேஸ்வரர், குமரீசுவரர்
இறைவி பெயர்மதுகரவேணி.
பதிகம்அப்பர் (6-70-9)
எப்படிப் போவது நாமக்கல்லில் இருந்து தெற்கே 24 கி.மீ. தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் காவிரியின் வடகரையில் அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. நாமக்கல்லிலிருந்து மோகனூருக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
ஆலய முகவரி அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில்
மோகனூர்
மோகனூர் அஞ்சல்
நாமக்கல் வட்டம்
நாமக்கல் மாவட்டம்
PIN - 637015.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
குமரி கொங்கு (மோகனூர்) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி	(6-70-9)
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை		
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :

திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, 
கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, 
தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம், 
கருகாவூர் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்