தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் அப்பரின் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள செம்பங்குடி, நல்லக்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, தேவன்குடி, புதுக்குடி, ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தென்களக்குடி (இன்றைய நாளில் களக்காடு என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்சத்யவாகீஸ்வரர்
இறைவி பெயர்கோமதியம்மன்
பதிகம்அப்பர் (6-71-3)
எப்படிப் போவது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இருந்து மேற்கே சுமார் 13 கி.மீ. தொலைவிலும், சேரன்மகாதேவியில் இருந்து தெற்கே சுமார் 21 கி.மீ. தொலைவிலும் களக்காடு உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு சத்யவாகீஸ்வரர் திருக்கோவில்
களக்காடு
களக்காடு அஞ்சல்
நாங்குனேரி வட்டம்
திருநேல்வேலி மாவட்டம்
PIN - 627501

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணிமுதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தென்களக்குடி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகப் பாடலில் "குடி" என்று வழங்கும் தலங்களை அப்பர் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.


நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி 
நல்லக்குடி நளிநாட்டியத்தான் குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே.

பொழிப்புரை :

நல்ல இடபக் கொடியை மேலே உயரத்தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய சிவபெருமானுடைய 
செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான்குடி, கற்குடி, இனிய களக்குடி, 
செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் 
ஊர்களாகிய விற்குடி, வேள்விக்குடி, நன்மமைமிகு வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, 
புற்குடி, மாகுடி, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி, என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும்

தென்களக்குடி இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps