தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | கருப்பூர் |
| இறைவன் பெயர் | அகத்தீஸ்வரர் |
| இறைவி பெயர் | அகிலாண்டேஸ்வரி |
| பதிகம் | சுந்தரர் (7-98-3) |
| எப்படிப் போவது | கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலை வழியில் கருப்பூர் உள்ளது. கருப்பூர் ஊரைத் தாண்டி சுமார் 2 கி.மீ. சென்றால் நத்தம் என்ற இடம் வரும். இங்கு சாலை ஓரத்திலேயே அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் நத்தம் கொரநாட்டு கருப்பூர் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612501 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் திறந்திருக்கும். |
சுந்தரரின் 7-ம் திருமுறையில் 98-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
கச்சிய னின்கருப் பூர்விருப் பன்கரு திக்கசிவார் உச்சியன் பிச்சையுண் ணியுல கங்களெல் லாமுடையான் நொச்சியம் பச்சிலை யான்நுரை தீர்புன லாற்றொழுவார் நச்சிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.