தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள கொடுங்கோளூர், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், நியமநல்லூர், எழுமூர், ஏழூர், தோழூர், ஏமகூடமலை (ஏமகூடம்) ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கடம்பை இளங்கோயில்
இறைவன் பெயர்உருத்திர கோடீஸ்வரர், ருத்ராபதி
இறைவி பெயர்
பதிகம்அப்பர் (6-70-5)
எப்படிப் போவதுசிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி சென்று, பின் அங்கிருந்து எய்யலூர் வழியாக மேலக்கடம்பூர் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தை அடைவதற்கு முன்பாகவே கீழக்கடம்பூர் என்ற ஊர் வரும். இந்த கீழக்கடம்பூரில் தான் கடம்பை இளங்கோவில் என்ற வைப்புத் தலம் உள்ளது,
ஆலய முகவரிஅருள்மிகு உத்ராபதீஸ்வரர் திருக்கோவில்
கீழக்கடம்பூர்
மேலக்கடம்பூர் அஞ்சல்
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர்மாவட்டம்
PIN - 608304

இவ்வாலயம் முற்றிலும் சிதலமடைந்து விட்டது. தற்போது தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
கடம்பை இளங்கோயில் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 5-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


கொடுங்கோளூர் அஞ்சைக்களம்  செங்குன்றூர்கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவுநின்றியூர் நீடூர் நியம நல்லூர் இடும்பாவனம் 
எழுமூர் ஏழூர் தோழூர்எறும்பியூர் ஏராரும் ஏமகூடம் கடம்பை இளங்கோயில் 
தன்னினுள்ளும் கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :

கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்கா, நெடுங்களம், 
நன்னிலம், நெல்லிக்கா, நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர், 
எறும்பியூர், அழகிய ஏமகூடம், கடம்பை இளங்கோயில் ஆகிய இடங்களில் 
கயிலாயநாதனைக் காணலாம்.

கடம்பூரில் இரண்டு கோவில்கள் உள்ளன. கீழக்கடம்பூரில் உள்ள கோவில் தேவார வைப்புத் தலமாகவும், மேலக்கடம்பூரில் உள்ள கோவில் பாடல் பெற்ற தலமாகவும் உள்ளன. கீழக்கடம்பூரில் உள்ள தேவார வைப்புத் தலமாகப் போற்றப்பட்ட இவ்வாலயம் இந்நாளில் முற்றிலும் சிதலமடைந்து விட்டது. தற்போது தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் பெரும் முயற்சியால் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலக்கடம்பூரிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலத்தைப் போல இவ்வாலயமும் நல்ல நிலையில் இருந்த போது மிகுந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவிலாக இருந்திருக்க வேண்டும். உத்திராபதி கோவில் என்று இப்பகுதி மக்கள் இவ்வாலயத்தை குறிப்பிடுகின்றனர்.

சிதைந்து விட்ட இவ்வாலயத்தின் இறைவனை ஒரு கீற்றுக் கொட்டகையில் வைத்து தீபமேற்றி வழிபாடு செய்து வந்துள்ளனர். இப்பக்கத்தில் காணும் சிதிலமடைந்த ஆலயத்தின் புகைப்படங்கள் யாவும் பிப்ரவரி 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்டவை. புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் சில புகைப்படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


கடம்பை இளங்கோயில் உருத்திர கோடீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
தொல்பொருள் ஆய்வுத்துறை அறிவிப்புப் பலகை கீற்றுக் கொட்டகையில் மூலவர் உருத்திர டீஸ்வரர் நந்தி சிற்பம்
சிதிலமடைந்த கோவிலின் பகுதி சிதிலமடைந்த கோவிலின் பகுதி சிதிலமடைந்த கோவிலின் பகுதி
புனரமைப்புக்குப் பிறகு ஆலயத்தின் தோற்றம் புனரமைப்புக்குப் பிறகு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் புனரமைப்புக்குப் பிறகு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி