இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள எச்சில் இளமர், ஏமநல்லூர், இறையான்சேரி, அளப்பூர், ஆறை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | கச்சிப் பலதளி |
| இறைவன் பெயர் | |
| இறைவி பெயர் | காமாட்சி |
| பதிகம் | அப்பர் (6-70-4) |
| எப்படிப் போவது | காஞ்சிபுரம் சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சென்னையில் இருந்து ரயில் மற்றும் பேருந்து வசதிகள் அதிகம் இருப்பதால் இத்தலத்திற்குச் செல்வது மிகவும் எளிது. தமிழ்நாட்டின் மற்ற பெரிய நகரங்களில் இருந்தும் காஞ்சீபுரம் வர போக்குவரத்து வசதிகள் உள்ளன. |
| ஆலய முகவரி | |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
எச்சிலிளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர்
இறையான்சேரி அச்சிறுபாக்கம் அளப்பூர் அம்பர்
ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறை கைச்சினம்
கற்குடி கச்சூர் ஆலக்கோயில் கரவீரம்
காட்டுப்பள்ளி கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும்
கயிலாய நாதனையே காணலாமே.
பொழிப்புரை :
காஞ்சீபுரத்திலுள்ள கச்சி ஏகம்பம், திருஓணகாந்தன்தளி, திருமேற்றளி, கச்சி அதேகதங்காவதம்,
கச்சிநெறி காரைக்காடு என்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்களைத் தவிர காமாட்சி அம்மன் அருள் புரியும் காமகோட்டம் மற்றும் அநேக சிவாலயங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் ஒரு சேர
குறிப்பிடும் வகையில் கச்சிப் பலதளி என்று அப்பர் பெருமான் னது தேவாரப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
| கச்சிப் பலதளி ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |