தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | இரும்புதல் (தற்போது இரும்புதலை என்று வழங்குகிறது) |
| இறைவன் பெயர் | திரிலோகநாதசுவாமி |
| இறைவி பெயர் | திரிலோகநாயகி |
| பதிகம் | அப்பர் (6-51-6) |
| எப்படிப் போவது | திருக்கருகாவூர் - சாலியமங்கலம் சாலையில் திருக்கருகாவூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் இரும்புதல் சிவாலயம் உள்ளது. சாலை ஓரத்திலேயே ஆலயம் உள்ளது.. |
| ஆலய முகவரி | அருள்மிகு திரிலோகநாதசுவாமி திருக்கோவில் இரும்புதல் இரும்புதல் அஞ்சல் வழி.சாலியமங்கலம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613504 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 முதல் 9 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
அப்பரின் 6-ம் திருமுறையில் 51-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பாடல் அப்பர் திருவீழீமீழலை பதிகத்தில் இடம் பெற்றுள்ளது.
பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பாழியார் பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார் இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏரார் இன்னம்பரார் ஈங்கோய் மலையார் இன்சொற் கரும்பனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் விரும்பமரர் இரவுபகல் பரவியேத்த வீழிமிழலையே மேவினாரே. பொழிபுபுரை: கரும்பு போன்று இனிய உமாதேவியோடு பெரும்புலியூரை விரும்பிய பெருமான், அவ்வூர் மூலத்தானம், அரதைப்பெரும்பாழி, இரும்புதல், இரும்பூளை, இன்னம்பர், கருகாவூர், கருப்பறியலூர், கரவீரம் என்ற இடங்களில் தங்கித் தம்மை விரும்பும் தேவர்கள் இரவும் பகலும் முன்னின்று புகழ்ந்து துதிக்குமாறு வீழிமிழலையையே விரும்பி அடைந்தார்.