தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள பழையாறு, நாலாறு, தெள்ளாறு, வளைகுளம், தளிக்குளம், திருக்குளம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்இடைக்குளம் (இன்றைய நாளில் மருத்துவக்குடி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்ஐராவதேஸ்வரர்
இறைவி பெயர்அபிராமி
பதிகம்அப்பர் (6-71-10)
எப்படிப் போவது கும்பகோணம் - மயிலாடுதுறை பேருந்து சாலை வழியில் ஆடுதுறை என்ற ஊர் உள்ளது. ஆடுதுறையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இன்றைய நாளில் மருத்துவக்குடி என்று அறியப்படும் இடைக்குளம் வைப்புத் தலம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில்
மருத்துவக்குடி
ஆடுதுறை அஞ்சல்
வழி ஆடுதுறை
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612101

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8-30 முதல் 11 மணி வரையிலும் மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இடைக்குளம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்பூந்துருத்தியில் தங்கியிருந்த போது பாடிய பதிகமாகும்


நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு    (6-71-10)
நலம் திகழும் நாலாறும் திருவையாறும்
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல்
இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம்
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும்
குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே.

பொழிப்புரை : 

நள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நலம் திகழும் நாலாறு, திருவையாறு, தெள்ளாறு, 
வளைகுளம், தளிக்குளம், நல்ல இடைக்குளம்,  திருக்குளம், அஞ்சைக்களம், 
குறையாத சிறப்புடைய வேட்களம், நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, பரந்து 
திகழும் கோடிகா என்றெல்லாம் தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலை அணிந்த 
சிவபெருமான் விளங்கும் ஆறு, குளம், களம், கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோம்