Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


பாடலீஸ்வரர் திருக்கோவில், திருப்பாதிரிபுலியூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பாதிரிபுலியூர் (தற்போது கடலூர் நகரின் ஒரு பகுதி)
இறைவன் பெயர்பாடலீஸ்வரர், பாடலேஸ்வரர், தோன்றாத்துணை நாதர்
இறைவி பெயர்பெரியநாயகி, தோகைநாயகி, அருந்தவநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருப்பாதிரிபுலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதி. திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரிஅருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோவில்
திருப்பாதிரிபுலியூர் அஞ்சல்
கடலூர்
கடலூர் மாவட்டம்
PIN - 607002
அருகில் உள்ள திவ்ய தேசம்திருப்பாதிரிபுலியூருக்கு அருகே சுமார் 5 கி.மீ. தொலைவில் திருவந்திபுரம் என்கிற திவ்ய தேசம் உள்ளது.பெருமாள் இங்கு தேவநாத பெருமாளாக காட்சி அளிக்கிறார்.


படிக்கும் நேரம் - நிமிடங்கள்

தல வரலாறு: ஒரு முறை கைலாயத்தில் பரமனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பார்வதி தன் திருக்கரங்களால் மூடினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் சிவபெருமான் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு பாதிரி வனமாகத் திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்றாள். ஆலயத்தில் இறைவன் கருவறை சுற்றி வரும்போது கஜலட்சுமி சந்நிதியை அடுத்து, துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே உள்ளது.


கோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன் மண்டபமும் அதையடுத்து 5 நிலை இராஜகோபுரமும் உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன.



இராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரதீர்த்தம் நல்ல படித்துறைகளுடன் உள்ளது.



வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி முதலியவைகளைத் தரிசிக்கலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை.



வெளிப்பிராகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தொழுது 2வது வாயிலைக் கடந்து இடப்புறமாகத் திரும்பினால் உள்சுற்றில் சந்திரனும் அதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தமும், அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் அப்பர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர் கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவிசெய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் ஆகியவையும் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது உட்சென்றால் பாடலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தலமரமான ஆதிபாதிரி மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது.




புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இத்தலம் இதுவாகும். இதன் காரணமாகவே பாதிரி மரத்தை தலவிருட்சமாக உள்ள இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் வடக்கு நோக்கிய மயிலின் மீது ஒரு காலை மடித்து அமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி தெய்வானை இருவரும் அருகே நின்ற கோலத்தில் காட்சிதருகின்றனர். அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பாடல் அருளிச் செய்துள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் இத்தலத்திற்குரியது.

எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை இறைவியின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். பள்ளியறை இல்லாத கோவில்களும் உண்டு. (எடுத்துக் காட்டாக திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தைக் கூறலாம்). ஆனால் பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பு.


திருநாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) சமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பர் சுவாமிகள் கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே என நமசிவாயப் பதிகம் பாடித் துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயப்பட்டு அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்" என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது. நாவுக்கரசர் பாடிய இப்பதிகம் நமசிவாய திருப்பதிகம் என்று போற்றப்படுகிறது.

கரையேறிய அப்பர் திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் எனத் தொடங்கும் பதிகம் பாடி திருப்பாதிரிப்புலியூர் இறைவனைத் தொழுதார். அப் பதிகத்தில் "தோன்றாத்துணையாய் இருந்தனன் தன் அடியோர்களுக்கே" என்று குறிப்பிடுவதால் இத்தல இறைவன் தோன்றாத்துணை நாதர் என்னும் பெயரும் பெற்றார்.


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. முன்னம்நின்ற முடக்கால்

திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. ஈன்றாளு மாயெனக் கெந்தை

அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்

  1. நிணமொடு குருதி நரம்பு
சிவ பெருமானின் 64 வடிவங்கள் கீழே தரப்பட்டுள்ளது
Names
1லிங்க மூர்த்தி
2லிங்கோத்பவ மூர்த்தி
3முகலிங்க மூர்த்தி
4சதாசிவ மூர்த்தி
5மகா சதாசிவ மூர்த்தி
6உமாமகேஸ்வர மூர்த்தி
7சுகாசன மூர்த்தி
8உமேச மூர்த்தி
9சோமாஸ்கந்த மூர்த்தி
10வ்ரிஷபாந்திக மூர்த்தி
11சந்திரசேகர மூர்த்தி
12புஜங்கலளித மூர்த்தி
13சதாநிருத்த மூர்த்தி
14கங்காவிசர்ஜன மூர்த்தி
15அர்த்தநாரீஸ்வர மூர்த்தி
16வ்ரிஷபாரூடர்
17புஜங்கத்ராச மூர்த்தி
18சண்டதாண்டவ மூர்த்தி
19திரிபுராந்தக மூர்த்தி
20கஜாசுர சம்ஹார மூர்த்தி
21சந்த்யான்ருத்த மூர்த்தி
22கங்காதர மூர்த்தி
23கல்யாணசுந்தர மூர்த்தி
24ஜ்வாரபக்ன மூர்த்தி
25சார்த்தூலஹர மூர்த்தி
26கேசவார்த்த மூர்த்தி
27சண்டேச அனுக்கிரக மூர்த்தி
28வீணா தட்சிணாமூர்த்தி
29இலகுளேஸ்வர மூர்த்தி
30வடுக மூர்த்தி
31அகோர மூர்த்தி
32குரு மூர்த்தி
33சலந்தரவத மூர்த்தி
34ஏகபாத மூர்த்தி
35கௌரிலீலாசமன்வித மூர்த்தி
36பிரம்ம சிரச்சேத மூர்த்தி
37வராக சம்ஹார மூர்த்தி
38சிஷ்ய பாவ மூர்த்தி
39பாசுபத மூர்த்தி
40பிச்சாடன மூர்த்தி
41வ்யாக்யான தட்சிணாமூர்த்தி
42காலந்தக மூர்த்தி
43பைரவ மூர்த்தி
44க்ஷேத்ர மூர்த்தி
45தட்சயஞ்யஷத மூர்த்தி
46அசுவாருட மூர்த்தி
47ஏகபாத மூர்த்தி
48கௌரிவரப்ரத மூர்த்தி
49விசாபகரண மூர்த்தி
50கூர்ம சம்ஹார மூர்த்தி
51பிரார்த்தனா மூர்த்திy
52கங்காள மூர்த்தி
53சிம்ஹக்ன மூர்த்தி
54யோக தட்சிணாமூர்த்தி
55காமதகன மூர்த்தி
56ஆபத்தோத்தரண மூர்த்தி
57வீரபத்ர மூர்த்தி
58கிராத மூர்த்தி
59கஜாந்திக மூர்த்தி
60திரிபாத மூர்த்தி
61சக்கரதான மூர்த்தி
62கருடாந்திக மூர்த்தி
63மச்ச சம்ஹார மூர்த்தி
64இரத்த பிட்சா பிரதான மூர்த்தி