தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

தேவார வைப்புத் தலங்கள் பெயர்கள்
அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ள பதிகங்கள். ...

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


திருமுறைகளில் பாடல் பெற்ற தலங்களை தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகீயோர் தனிப்பாடலகள் மூலம் பாடியுள்ளனர். அவ்வாறு பாடும் போது அவர்கள் வேறு சில தலங்களைப் பற்றியும் தங்களுடைய பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். தேவார மூவர் தங்கள் தல யாத்திரையில் பதிகம் பாடும் போது பல வைப்புத் தலங்களைப் பற்றியும் குறிப்பிட்டுப் பாடி இருந்தாலும், அத்தலங்களுக்கு தனிப் பாடல் கிடைகாத காரணத்தால் அவை வைப்புத் தலங்கள் என்று பெயர் பெற்றன. ஒரே பதிகத்தில் பல வைப்புத் தலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ள சில பதிகங்கள் இங்கே கீழே தரப்பட்டுள்ளன.

  1. திருஞானசம்பந்தர் பதிகம் - 2-ம் திருமுறை - பதிகம் 2-39
  2. திருநாவுக்கரசர் பதிகம் - 6-ம் திருமுறை - திருவீழிமிழலை பதிகம் 6-51
  3. திருநாவுக்கரசர் பதிகம் - 6-ம் திருமுறை - க்ஷேத்திரக் கோவை திருத்தாண்டகம் 6-70
  4. திருநாவுக்கரசர் பதிகம் - 6-ம் திருமுறை - அடைவுத் திருத்தாண்டகம் 6-71
  5. சுந்தரர் பதிகம் - 7-ம் திருமுறை - ஊர்த்தொகை 7-47
  6. சுந்தரர் பதிகம் - 7-ம் திருமுறை - திருநாட்டுத் தொகை 7-12