தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

மார்க்க சகாயேஸ்வரர் (வழிகாட்டும் வள்ளல்) திருக்கோவில், மூவலூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்மூவலூர்
இறைவன் பெயர்மார்க்க சகாயேஸ்வரர், வழிகாட்டும் வள்ளல்
இறைவி பெயர்சௌந்தர நாயகி, மங்களாம்பிகை
பதிகம்அப்பர் (5-65-8, 6-41-9)
எப்படிப் போவது மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் மூவலூர் வைப்புத் தலம் அமைந்துள்ளது..
ஆலய முகவரி அருள்மிகு மார்க்க சகாயேஸ்வரர் திருக்கோவில்
மூவலூர்
மூவலூர் அஞ்சல்
வழி மயிலாடுதுறை
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609806

இவ்வாலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூவலூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 5-ம் திருமுறையில் 65-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் திருப்பூவனூர் தலத்திற்குரிய பதிகமாகும்.

பூவனூர் தண் புறம்பயம் பூம்பொழில்	5-65-8	
நாவலூர் நள்ளாறொடு நன்னிலங்
கோவலூர் குடவாயில் கொடுமுடி
மூவலூரும் முக் கண்ணனூர் காண்மினே.

பொழிப்புரை :	www.thevaaram.org

பூவனூரும், குளிர்ந்த புறம்பயமும், பூம்பொழில் சூழ்ந்த நாவலூரும், நள்ளாறும், நன்னிலமும், கோவலூரும், குடவாயிலும், கொடுமுடியும், மூவலூரும் ஆகிய அனைத்தும் முக்கண்ணன் ஊர்கள் காண்பீர்களாக.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 41-வது பதிகத்தில் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் திருநெய்த்தானம் தலத்திற்குரிய பதிகமாகும்.

தந்தைதா யில்லாதாய் நீயே யென்றுந்	6-41-9	
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
முந்திய முக்கணாய் நீயே யென்றும்
மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.

பொழிப்புரை :	www.thevaaram.org

நின்ற நெய்த்தானா! நீ எங்கள் உள்ளத்திலும் மேம்பட்ட கயிலாயம், ஏகம்பம், மூவலூர், தேனூர் என்ற திருத்தலங்களிலும் உறைகின்றாய். தந்தை தாய் இல்லாத பிறவாயாக்கைப் பெரியோனாய், யாவருக்கும் முற்பட்ட முக்கண்ணனாய், எங்களுக்குத் தாய் தந்தையாகவும், தலைவனாகவும் உள்ளாய் என்று அடியார்களாகிய நாங்கள் உன்னைத் துதிக்கின்றோம்.

மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் 5 நிலை கோபுரம்

கோபுரம் கடந்து உள் தோற்றம்

பலிபீடம், சுற்றிலும் 4 நந்திகள்

செளந்தரநாயகி சந்நிதி

இறைவன் சந்நிதி முன் உள்ள மண்டபம்

கருவறை சுற்றுப் பிராகாரத்தில் சிலா உருவங்கள்

கருவறை சுற்றுப் பிராகாரத்தில் சிலா உருவங்கள்

வள்ளி தெய்வானையுடன் முருகர்

ஆதி மார்க்கசகாயர் சந்நிதி