தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

பசுபதி ஈஸ்வரர் திருக்கோவில், மாதானம்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்மாதானம்
இறைவன் பெயர்பசுபதி ஈஸ்வரர்
இறைவி பெயர்பெரியநாயகி
பதிகம்அப்பர் (6-97-10)
எப்படிப் போவது சீர்காழியில் இருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலையில் 5 கி.மி. தொலைவில் மாதானம் ஊர் உள்ளது. தென்திருமுல்லைவாயில் செல்லும் பேருந்துகள் மாதானம் வழியாகச் செல்லும்.
ஆலய முகவரி அருள்மிகு பசுபதி ஈஸ்வரர் திருக்கோவில்
மாதானம்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 631502

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மாதானம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த பொது அருளிச் செய்ததாகும்

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகாவூர்
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :
உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

Pasupath Easwarar
மூலவர் பசுபதி ஈஸ்வரர்