தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில், பூந்துறை


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பூந்துறை (இன்றைய நாளில் அவல்பூந்துறை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்புஷ்பவனேஸ்வரர்
இறைவி பெயர்பாகம்பிரியாள்
பதிகம்அப்பர் (6-71-11)
எப்படிப் போவது ஈரோட்டில் இருந்து அறச்சலூர் வழியாக தாராபுரம் செல்லும் பேருந்து சாலை வழியில் அறச்சலூர்க்கு முன்பாகவே ஈரோட்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பூந்துறை உள்ளது. ஈரோட்டில் இருந்து அடிக்கடி நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. கோயில் வாசலிலேயே இறங்கலாம்.
ஆலய முகவரி அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்
பூந்துறை
பூந்துறை அஞ்சல்
ஈரோடு மாவட்டம்
PIN - 638115

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பூந்துறை வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 11-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

கயிலாய மலையெடுத்தான் கரங்களோடு	
சிரங்களும் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறை தென் பாலைத்துறை
பண்டெழுவர் தவத்துறை வெண்டுறை பைம்பொழில்
குயிலாலந்துறை சோற்றுத்துறை பூந்துறை
பெருந்துறையும் குரங்காடுதுறையி னோடு
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை
மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே.

இப்பதிகப் பாடலில் "துறை" என வருவனவற்றை வகுத்து அப்பர் அருளிச் செய்துள்ளார்.

பொழிப்புரை :

கயிலாய மலையை எடுத்த இராவணனுடைய கரங்களும் சிரங்களும் வலிமை சிதையும் வண்ணம் தன் கால் விரலால் அழிவுண்டாக்கிய சிவபெருமான் பயின்றுறையும் பராய்த்துறை, தென்பாலைத்துறை, எழுமுனிவர் பண்டுதவம் செய்த தவத்துறை, வெண்டுறை, பசிய சோலையிடத்துக் குயில்கள் வாழும் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை ஆகியவற்றையும் துறை என்னும் பெயர் தாங்கும் மற்றைய திருத்தலங்களையும் வணங்குவோம்.

பூந்துறை புஷ்பவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

கருங்கல் விளக்குத்தூண், கோபுரம்

5 நிலை இராஜகோபுரம்

நந்தி, பலிபீடம்

இறைவன் சந்நிதிக்குச் செல்லும் வழி

கருவறை விமானம்

விஷ்ணு துர்க்கை

சனி பகவான்

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி

விசாலாட்சி சந்நிதி