தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

புராதனவனேஸ்வரர் திருக்கோவில், திருச்சிற்றம்பலம்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருச்சிற்றம்பலம்
இறைவன் பெயர்புராதனவனேஸ்வரர்
இறைவி பெயர்பெரியநாயகி
பதிகம்சுந்தரர் (7-12-4)
எப்படிப் போவது பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் பேருந்து சாலையில் 15 கி.மீ. தோலைவில் உள்ளது. சாலை ஓரத்தில் கோவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோவில்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் அஞ்சல்
வழி பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 614628

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்

திருச்சிற்றம்பலம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

தேங்கூரும் திருச்சிற்றம்பலமும்
சிராப்பள்ளி பாங்கூர் எங்கள் பிரான் உறையும்
கடம்பந்துறை பூங்கூரும் பரமன் பரஞ்சோதி
பயிலும் ஊர் நாங்கூர் நாட்டு நாங்கூர் 
நறையூர் நாட்டு நறையூரே.

பொழிப்புரை :

எமக்குத் துணையாய் வரும் தலைவனும், எப்பொருட்கும் மேலானவனும், எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் உள்ளவனும் ஆகிய இறைவன் நீங்காது வாழும் அழகு மிகுந்த ஊர்கள், தேங்கூர், திருச்சிற்றம்பலம், சிராப்பள்ளி, அழகு மிக்க கடம்பந்துறை, நாங்கூர் நாட்டிலுள்ள நாங்கூர், நறையூர் நாட்டிலுள்ள நறையூர்` என்பவை .

கோவில் அமைப்பு:

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் முகப்பு வாயில்

முகப்பு வாயில் கடந்து உள்தோற்றம்

இரட்டை விநாயகர் மற்றும் நாகர் சந்நிதி

மூலவர் கருவறை விமானம்

தட்சிணாமூர்த்தி சந்நிதி விமானம்

வள்ளி தெய்வானையுடன் முருகர்

கஜலட்சுமி சந்நிதி

பூவிழுங்கி விநாயகர்

நவக்கிரக சந்நிதி

கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்

விநாயகர் சந்நிதி

மகாவிஷ்ணு சந்நிதி