தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

திருவேட்டீஸ்வரர் திருக்கோவில், திருவேட்டி (திருவல்லிக்கேணி)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவேட்டி (இன்றைய நாளில் திருவல்லிக்கேணி என்று பெயர் - சென்னை நகரின் ஒரு பகுதி)
இறைவன் பெயர்திருவேட்டீஸ்வரர்
இறைவி பெயர்செண்பகாம்பிகை
பதிகம்அப்பர் (6-7-7)
எப்படிப் போவது சென்னை நகரின் ஒரு பகுதியான திருவல்லிக்கோணியில் இத்தலம் உள்ளது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள பிள்ளையார் கோவில் தெருவில் சென்று இக்கோவிலை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோவில்
பிள்ளையார் கோவில் தெரு
திருவேட்டீஸ்வரன்பேட்டை
திருவல்லிக்கோணி
சென்னை
PIN - 600005

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்

திருவேட்டி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

அப்பரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது..

தெண்ணீர்ப் புனல் கெடில வீரட்டமும்
சீர்காழி வல்லம் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர்
உறையூர் நறையூர் அரணநல்லூர்
விண்ணார் விடையார் விளமர் வெண்ணி
மீயச்சூர் வீழிமிழலை மிக்க
கண்ணார் நுதலார் கரபுரமும்
காபாலியார் அவர் தம் காப்புக்களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம், சீர்காழி, வல்லம், திருவேட்டி, நீர்வளம் மிக்க ஏடகம், ஊறல், அம்பர், உறையூர், நறையூர், 
அரணநல்லூர், வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவபெருமான் உகக்கும் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழிமிழலை, நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம்.

கோவில் அமைப்பு: .

திருவேட்டி திருவேட்டீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஏகாதோற்றம்

3 நிரம்

அம்பாந்நிதி தோற்றம்

விர்

முருலை

விர்

கனம்

கோத்தி

வள்கர்