தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

ராஜசோளீஸ்வரர் திருக்கோவில், திருமலை


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருமலை (இன்றைய நாளில் திருமலைராயன்பட்டிணம் என்று பெயர். மக்கள் வழக்கில் சுருக்கமாக திருபட்டிணம் என்று அழைக்கின்றனர்.)
இறைவன் பெயர்ராஜசோளீஸ்வரர்
இறைவி பெயர்அபிராமி
பதிகம்சுந்தரர் (7-12-7)
எப்படிப் போவது காரைக்காலில் இருந்து நாகப்பட்டிணம் செல்லும் பேருந்து சாலையில் காரைக்காலுக்கும் நாகூருக்கும் நடுவில் திருமலைராயன்பட்டிணம் உள்ளது. பிரதான சாலையிலிருந்து சற்று உள்ளடங்கி சுமார் அரை கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு ராஜசோளீஸ்வரர் திருக்கோவில்
திருமலைராயன்பட்டிணம்
திருமலைராயன்பட்டிணம் அஞ்சல்
வழி காரைக்கால்
புதுச்சேரி மாநிலம்
PIN - 609606

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்

திருமலை வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

ஈழநாட்டு மாதோட்டம் தென்னாட்டு இராமேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்தி நெய்த்தானம் திருமலை
ஆழியூரன நாட்டுக்கெல்லாம் அணியாகிய
கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி யதே.

பொழிப்புரை :

சிவபெருமானாருக்கு உரிய தலங்கள், ஈழநாட்டில் உள்ள மாதோட்டம், தென்னாட்டில் உள்ள இராமேச்சுரம், சோழநாட்டிலுள்ள துருத்தி, நெய்த்தானம், ஆழியூர், திருமலை, நாட்டுக்கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில், கிள்ளிகுடி என்பவை.

கோவில் அமைப்பு:

திருமலைராயன்பட்டிணம் ராஜசோளீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

சுவாமி சந்நிதி முன் கொடிமரம்

63 நாயன்மார்கள் சிலாஉருவங்கள்

சுவாமி சந்நிதி நுழைவாயிலில்
துவாரபாலகர்கள்

மூலவர் ராஜசோளீஸ்வரர்

பிரதான விநாயகர் சந்நிதி

ஆலயத்தின் உள்புறத் தோற்றம்

தந்தைக்கு உபதேசம் செய்யும் முருகர்

கந்தசஷ்டி விழாவில் மயில் வாகனத்தில்
முருகரின் அழகான தோற்றம்